முள்ளிவாய்க்கால் நினைவு த் தூண் இடிப்பு

தமிழக முதல்வர், துணை முதல்வர் கண்டனம் 

சென்னை, ஜன.9- இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்  இடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேர திர்ச்சி அளிக்கிறது.

உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் .பன்னீர்செல்வம்

தமிழக துணை முதல்வர் .பன்னீர் செல்வம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது: இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.  ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண் டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப் படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத் திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Comments