உழவர்வாழ்வு வீழ்ந்துவிடில்
உருப்படுமா
நம்தேசமென்று
ஊரில்பேசும்
குரல் இங்கே
ஒலிப்பதுதான்
இன்று கேட்கிறது!
கடுங்குளிரும்
உரைபனியும்
கடுமைகாட்டும்
வேளையிலும்!
அல்லு
பகல்பாராது
அடிமைவிலங்கை
உடைப்பதற்கு
டெல்லி
தலைநகர் வீதிகளில்
ததும்பி
வழியும் மக்கள் வெள்ளம்!
முற்றுகைப்
போராட்டம்
மாநகர்
முழுவதுமாய்
நீறுபூத்த
நெருப்பாக நமக்கு
சோறுபோடும்
உழவர்கள்!
குறைந்தபட்ச
விலையில்லை,!
நிலத்தை
கூறுபோடும்
திட்டங்கள்!
பதுக்கலுக்கு
வழிகாணும்
படு
பாதகமான செயல்பாடு!
மக்களாட்சித்
தத்துவத்தை
மண்ணுக்குள்ளே
புதைத்துவிட்டு
கார்ப்பரேட் கைமாறும்
கபளிகரமான
சட்டங்கள்!
வளமானநம்தேசம்
வறண்டபூமியாக
மாறிவிடில்
வெகுமக்கள்
கையேந்தும்
காட்சிகள்
தான் உருவாகும்! எனும்
விழிப்புணர்வு
பெற்றதனால்
வெகுண்டெழுந்த
போராட்டம்! அது
இலட்சோப
லட்சம் மக்கள்கூடும்
நாடுதழுவிய
போராட்டம்!
இன்று
வெற்றியின் இலக்கை
முன்னெடுத்து
வாகைசூடும்
போராட்டம்!!
வாழ்க
உழவர்! வெல்க வேளாண்மை!
கவிமுகில்
பெ. அறிவுடைநம்பி திண்டுக்கல்