ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி அருகே சிங்கு எல் லையில் போராடி வரும் விவசாயிகளுக்கும் அவ்வூர் மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, காவல்துறை கண்ணீர் புகைக் குண்டு களை வீசியுள்ளது.

·     பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் களின் கூட்டத்தை மக்களவைத் தலைவர் அழைத்து, வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினர் பிரச்சினை மற்றும் இந்திய எல்லை யில் சீன ராணுவ ஆக்கிரமிப்பு ஆகியன குறித்து விவாதிக்க வேண் டும் என எம்.அய்.எம். கட்சியின் தலைவர் அசாதாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

·     வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை அரசு புரிந்து அதன்படி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     வேளாண் சட்டங்களை ரத்து செய்து, விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்திட வேண்டும் மற்றும் விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் என அருணா ராய், பிரசாந்த் பூஷண் மற்றும் ஹர்ஷ் மந்தர் உள்ளிட்ட சிவில் சமூக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வற்புறுத்தியுள்ளனர்.

தி டெலிகிராப்:

·     நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மீது தொடரப்பட்ட உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான தனது  வாக்கு மூலத்தில் "ஒரு ஜனநாயகத்தில் எந்தவொரு அதிகார நிறுவனமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று நம்புவது புலம்பெயர்ந்தோர் ஒரு தவறான திட்டமிடப்பட்ட, நாடு தழுவிய பூட்டுதலின் போது வீடு திரும்ப வேண்டும் என்று கூறுவது போன்றது: இது பகுத்தறிவற்றது மற்றும் ஜனநாயக விரோதமானதுஎன தெரி வித்துள்ளார். உதாரணமாகஒவ்வொரு வெற்றிகரமான இந்திய தொழிலதிபருக்கும் பின்னால் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி இருக்கிறதுஎன்ற நகைச்சுவையை எடுத்துக் கொள்ளுங்கள். நகைச் சுவை சூழ்நிலையின் கொடூரத்தை மழுங்கடிக்க முயற்சிக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அளவிலான ஆறுதலையும் அளிக்கிறது எனவும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

30.1.2021

Comments