வள்ளல் ‘வீகேயென்’ கண்ணப்பன் அவர்களது சிலையைத் திறந்து வைத்து தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை, ஜன.8- சிவகங்கை மாவட் டம் கண்டரமாணிக்கத்தில் வள்ளல்வீகேயென்’.கண்ணப்பன் அவர் களுடைய சிலைத் திறப்பு நிகழ்ச்சி நேற்று (7-1-2021) நடைபெற்றது.

தி.மு.. தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று, ‘வீகேயென்கண்ணப்பன் அவர்களின் வெண்கலத் தாலான உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

தி.மு.. தலைவர்  தளபதி மு..ஸ்டாலின் காணொலி உரையில் குறிப்பிட்டதாவது,

தி.மு.. என்ற மூன்றெழுத்துக்குக் கிடைத்த சொத்துதான்வீகேயென்என்ற மூன்றெழுத்து. ‘வீகேயென்என்ற சொல்லையும் அய்யா கண்ணப் பனையும் எப்படி பிரிக்க முடியாதோ, அந்தளவுக்கு வி.கே.என். - என்பதையும் தி.மு..வையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு கழகத்தோடு ரத்தமும் சதையுமாக இணைந்து கொண்டவர் தான்வீகேயென்கண்ணப்பன்.

அவரது சிலை, அவர் பிறந்த கண் டரமாணிக்கத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. சிலையாக வைப்பதற்கு எல்லாத் தகுதியும் படைத்தவர் தான் நம்முடைய கண்ணப்பன்.

கடந்த 2017ஆம் ஆண்டு அவர் மறைந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக திருச்சி வந்து அவருக்கு மரியாதை செலுத்தினேன். தலைவர் கலைஞர் முதுமை காரணமாக இல்லத்தில் ஓய்வெடுத்து வந்ததால் அவரால் வர இயலவில்லை. அவரும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உடனடியாக வந்திருப்பார். அந்தள வுக்கு தலைவர் கலைஞரோடும் கழகத்தோடும் நகமும் சதையுமாக பிணைந்து அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் கண்ணப்பன்.

பொதுவாக தொழில் அதிபர்கள், அரசியலில் ஆர்வம் காட்ட  மாட் டார்கள். அப்படியே ஆர்வம் உடைய வர்களாக இருந்தாலும் வெளிப் படையாக அடையாளம் காட்ட மாட்டார்கள். சில தொழிலதிபர்கள், ஆட்சிகள் மாறும் போது மாறிவிடுவார்கள். ஆனால் நிறம் மாறாத, ஒரே தலைமையை ஏற்று அதில் உறுதியாக இருந்த தொழிலதிபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானவர்வீகேயென்கண்ணப்பன்.

கழகத்தின் மீதான பற்றையோ, தலைவர் கலைஞர் மீதான பாசத் தையோ, அவர் என்றும் மறைத்தது இல்லை. அதனால் தான் கழகத்தின் சார்பில் சிலை அமைக்கப்படுகிறது. உழைப்பால் உயர்ந்த உத்தம மனி தர்கள் வரிசையில்வீகேயென்கண்ணப்பன் இடம் பெறுவார்.

கண்டரமாணிக்கம் என்ற சிற் றூரில் பிறந்த கண்ணப்பன், சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது கல்விக் கான பல்கலைக் கழகம் மட்டுமல்ல, கழகத்துக்கான பல்கலைக் கழகம்! திராவிட இயக்கத்துக்கான பல் கலைக் கழகம்! திராவிட இயக்கத்தின் தொட்டில் என்று சொல்லக் கூடிய பல்கலைக் கழகம்! இங்கே உரு வானவர் தான்வீகேயென்கண் ணப்பன் அவர்கள் என புகழாரம் சூட்டினார்.

Comments