அரியலூர்,
ஜன. 10- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.12.2020 ஞாயிறு மாலை 5 மணியளவில் ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகத்தில் சிறப் பாக நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்க மாவட்ட
தலைவர் விடுதலை நீல மேகன் மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன்,
மண்டலத் தலைவர் இரா கோவிந்த ராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண் ணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திராவிடர்
கழக தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும் தந்தை பெரியார் நினைவு நாள் ஊர்வலங்களை நடத்துவது குறித்தும் தோழர்கள் விரிவாக கருத்துகளை எடுத்து கூறினர். கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், "திராவிடம் வெல் லும் "என்ற தமிழர் தலைவர் அவர்களுடைய முழக்கத்தை செயல்படுத்துவது குறித்தும் திமுகவை ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபட வேண்டிய தன் அவசியத்தை விளக் கியும் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட அமைப்பாளர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட ப.க.தலைவர்
தங்க சிவமூர்த்தி, மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் இரா ராஜேந்திரன், கழக பேச்சாளர் வடலூர் புலவர் இராவணன், மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் சி. சிவக்கொழுந்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா தமிழ ரசன், ஒன்றிய செயலாளர் தியாக முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திக், மாவட்ட
இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், ஜெயங்கொண்டம்
ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி ,ஒன்றிய செயலாளர் துரை பிரபாகரன், செந்துறை ஒன்றிய தலைவர் மா. சங்கர், தா.பழூர் ஒன்றிய
தலைவர் இரா இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், ஆண்டிமடம்
ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ.இராம கிருஷ்ணன்,
ஆண்டிமடம் ஒன்றிய அமைப் பாளர் கோ. பாண்டியன், ஒன்றிய துணைத் தலைவர் த.பன்னீர்செல்வம், பா. சுந்தரமூர்த்தி,
வே.இனியா, கா.சமரன், அகநிலவன், செந்தில்,
ஆசிரியர் பிச்சமுத்து உள்ளிட்ட இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.
கலந்துரையாடல்
கூட்டத்தில் நிறைவேற்றப்ட்ட தீர்மானங்கள்
திராவிடர்
கழகத்தின் தலைமை செயற் குழுத் தீர்மானங்களை ஏற்று அதை சிறப்பா கவும் விரைவாகவும் செயல்படுத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
"மயக்க
பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை! என்ற சிறப்பான நூலினை மக்களிடம் கொண்டு சென்று பரப்புரை செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
"திராவிடம்
வெல்லும் " என்ற தலைப்பில் கருத்தரங்குகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படு
கிறது.