இந்திய சாலைகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் ஊடுருவும் சீன ராணுவம்

சிறீநகர், ஜன.27 லடாக் பகுதியில், சீனப் படையினர் இந்திய சாலைகளைப் பயன் படுத்தி, நமது பகுதிக்குள் நுழைகிறார்கள் என்று லடாக் பகுதியில் உள்ள கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியின் கடைக் கோடி டெம்காக் பிராந்தி யத்தில் உள்ளகிராமத்தின் பெயர் கோயுல், இது இந்தி யாவின் கடைசி கிராமம் என்று கூறப்படுகிறது, இங்கி ருந்து 12 கிலோ மீட்டர் மலைப்பகுதிக்கு அப்பால் சீன எல்லை உள்ளது, ஆனால் இந்த கிராமத்திற்கு வந்த சீன ராணுவத்தினர்  இக்கிரா மத்தில் உள்ளவர்கள் மலைச் சரிவில் தங்களது கால்நடை களை மேய்ச்சலுக்குப் பயன் படுத்தக்கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, இந்தியப் பகுதிக்குள்  சில சீன ராணுவத்தினர் வந் துள்ளனர் அப்போது, அதைக்  கண்ட கிராமத்தினர், இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத் தனர். அதே கிராமத்தினர், அந்த இடத்தில் 5 நாட்கள் வரை காவல் இருந்தனர்.

பின்னர், டிசம்பர் 16ஆம் தேதி, 2 சீன வாகனங்கள் மீண்டும் இப்பகுதிக்கு வந்துள் ளது. இவர்கள் இந்திய சீன பன்னாட்டுச் சாலையை பயன்படுத்தி இந்திய பகுதி களில் நீண்ட தூரம் நுழைந்து இந்தியர்களை மிரட்டியுள் ளனர். ஆனால், நாட்டை ஆளும் மோடி அரசு, சீன விஷயத்தில் பேசுவதற்கே பயந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்து இதுவரை இந் திய அரசு தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments