கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களின் படகு நால்வரில் இருவரின் உடல்கள் மீட்பு

புதுக்கோட்டை, ஜன.21 புதுக் கோட்டை கோட்டைப்பட்டினத் தில் இருந்து கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது விசைப் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியதில் உயிரிழந்த 2 மீன வர்களின் உடல்கள் கரை ஒதுங் கியதாக தகவல் கூறப்படுகிறது. கடலில் விழுந்த நான்கு மீனவர்களில் 2 பேர் உடல்கள்  மீட்கப்பட்டது. மற்ற இருவரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

Comments