காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தில் அவசரம் ஏன்?

இரா.முத்தரசன் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் 

சென்னை,ஜன.22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறுதிருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

 மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் அதானி குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர நிலத்தை எடுத்துக் கொடுக்கவே தாராளமயக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் வஞ்சக வலையில் வீழ்ந்து கிடக்கும் அஇஅதிமுக மாநில உரிமைகளையும், மக்கள் வாழ்வுரிமையினையும் பலி கொடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க  வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Comments