அரியானாவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

புதுடில்லி,ஜன.4, வேளாண் சட் டங்களுக்கு எதிராக டில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்ட வண்ணம் உள்ளனர். 

அரியானாவை சேர்ந்த விவசாயிகள் பலரும் டில்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டில்லி-ஜெய்ப்பூர் சாலையில் திரண்டனர். நேற்று (3.1.2021) மாலை டில்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கினர். ரிவாரி மாவட் டத்தின் மசானி பகுதியில் காவல் துறையினரின் தடுப்பு வேலிகளை மீறி செல்ல முயன்றனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.

இதற்கிடையே டில்லி போராட் டக்களத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 3 விவசாயிகள் மரண மடைந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் ஒருவர் மாரடைப்பாலும், மற்றொருவர் காய்ச்சலாலும் இறந்துள்ள நிலை யில், 3-வது நபரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோத னைக்குப்பின் தெரியவரும் என தெரிவித்தனர். தங்கள் கோரிக் கைகளை மத்திய அரசு ஏற்காவிட் டால் வருகிற 13ஆம் தேதி வேளாண் சட்ட நகல்களை எரித்து லோரி பண்டிகையை கொண்டாடுவோம் என விவசாயிகள் அறிவித்துள் ளனர்.

Comments