வேப்பிலைப்பட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் கருத்தரங்கம், மரக்கன்று நடுதல், புத்தக வெளியீடு

தருமபுரி, ஜன. 22- தருமபுரி கடத்தூர் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார், டாக்டர் அம்பேத் கர் அவர்களின் நினைவு நாளை முன் னிட்டும் 26.12.2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் வேப்பிலைப் பட்டி யாழ் திலீபன் இல்லத்தில் கருத்தரங்கம், மரக்கன்று நடுதல், புத்தக வெளியீடு ,விருந்து, என சிறப்பாக நடைபெற்றது.

சிலைக்கு மாலை  

நிகழ்ச்சியின் தொடக்கமாக வேப் பிலை பட்டியில் அண்ணல் அம்பேத் கர், சிலைக்கு மேனாள் திராவிடர் கழக இளைஞரணி தலைவரும் ஒன் றிய திமுக பொறுப்புக் குழு உறுப் பினருமான வகுத்துபட்டி பெ.அன் பழகன், ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் இளங்கோ, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் பெரிய சாமி, ஆகியோர் மாலை அணிவித் தனர். தந்தை பெரியார் சிலைக்கு மேனாள் நெடுஞ்சாலைத்துறை மேலாளர் புஷ்பராஜ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செய லாளர் ஆசிரியர் மு.பிரபாகரன் ஆகி யோர் மாலை அணிவித்தனர்.                              

மரக்கன்று                                        

ஆசிரியரின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் வேப்பி லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில மாணவர் கழக துணை செயலாளர் த.மு. யாழ்திலீபன் தலைமையில் ஒன்றிய மாணவர் கழக தலைவர் இ.சமரசம், வேப்பிலைப் பட்டி மாணவர் கழக தலைவர் ப.பெரியார்,  மாணவர் கழக அமைப் பாளர் பிரதாப் ஆகியோர் முன்னி லையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி, மாநில திராவிடர் கழக அமைப்புச் செயலா ளர் ஊமை.ஜெயராமன், மாநில திராவிடர் கழக மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி ஆகியோர் கழகத் தோழர்கள் கைதட் டலுக்கு இடையே மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.                                                

கருத்தரங்கம்                                         

திலீபன் இல்லத்தின் மேல் மாடி யில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக "இந்துத்துவா ஓர் பேராபத்து" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்த ரங்கு நிகழ்வுக்கு விடுதலை வாசகர் வட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட செயலாளர் கோ.தனசேகரன் வரவேற்புரையாற்றினார். மண்டல கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.பிரபாகரன், ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாநில அமைப்பு செயலாளர் ஜெய ராமன் தொடக்க உரையாற்றினார்.  கழக புத்தகங்களை மாவட்ட திராவி டர் கழகத் தலைவர் வீ.சிவாஜி வெளியிட வகுத்துப்பட்டி பெ.அன்பழகன், நெடுஞ்சாலை துறை மேலாளர் புஷ்பராஜ், தென்னக ரயில்வே எஸ்.சி, எஸ்.டி .தொழிற்சங்க கோட்ட செயலாளர் பெர்ணான்டஸ், ஒன்றிய திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் தோழர் சொ.பாண்டியன், தாளநத்தம் திமுக நிர்வாகி கோமகன், ஆகியோர் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.                          

சிறப்புரை                                        

"இந்துத்துவா ஓர் பேராபத்து" என்னும் தலைப்பில் திராவிடர் கழக மகளிர் பாசறை அமைப்பாளர் தோழர் சே.மெ.மதிவதனி இந்துத் துவா என்னும் பேராபத்து மக்களை எப்படி ஆட்கொள்கிறது? பிஜேபி ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் பறிப்பு, வருங் காலங்களில் பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில்  திராவிடர் கழக மக ளிரணி செயலாளர் முருகம்மாள், தர்மபுரி வாசகர் வட்டம் அமைப் பாளர் மல்லிகா, செந்தில்குமார், மேகநாதன், தாளநத்தம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முனுசாமி, அதிமுக நிர்வாகி  சின்னசாமி, பொன் தங்கராஜ், கு.தம்மசீல், உதயகுமார், முருகன்,  மற்றும் த.அறிவொளி, த. சுடரொளி, ஆ.சத்தரபதி, சி.நேதாஜி, சுசீலா, கலா, இந்திராணி, குமுதா விடுதலை சிறுத்தைகள் சார்பாக தமி ழழகன், குமரன், உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர் இறுதி யாக பெரியசாமி நன்றி கூறினார் வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments