விமர்சனங்களை எதிர்கொள்கிறவர்கள்தான் பொதுவாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்!

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

சென்னை, ஜன. 10   பொது வாழ்க்கை என்றாலே, விமர் சனங்களை எதிர்கொள்ளவேண்டும். யார் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்களோ, அவர்கள்தான் பொதுவாழ்க்கைக்கு வருவதற்குத் சரியான தகுதியான வர்கள். நாங்கள் அதிலே ஊறித் திளைத்தவர்கள் - தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடித்தவர் - பெரியார்மீது செருப்பு வீசி இருக்கிறார்கள் - மலத்தை வீசியிருக்கிறார்கள் - அவருடைய துணைவியாரைப்பற்றி சுவரில் அசிங்கமாக எழுதி வைத்தார்களே - அவருடைய வயது என்ன? அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல், பக்குவப் பட்டவர் தந்தை பெரியார் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்''

சிறப்புக் கூட்டம்!

2.1.2021   அன்று மாலை  காணொலிமூலம்  நடைபெற்ற ‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

ஓட்டப்பர் ஆகிவிட்டால்...

இது நியாயம்தானா?

தேர்தலில் எப்படி "ரண களம்" வரலாம்.

புரட்சிக்கவிஞர் சொன்னார்,

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ

 

தேர்தல் என்பது என்னவென்றால்,

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

ஓட்டப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்

எல்லாம் மாறி,  ஒப்பப்பர் ஆகிவிடுவார்

உணரப்பா நீ!

ஓட்டுப்போடு! எல்லோருக்கும் சம ஓட்டு - அந்த வாக்

குரிமையின் மூலமாக - ஜனநாயகத்தின் மூலமாக அதை மாற்றலாம் என்று காட்டக் கூடிய அளவிற்கு இருக்கும்போது இங்கே சொல்லுகிறார்.

‘‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் - ஆட்சி மாற்றம் இப்பொழுது இல்லை என்றால், எப்பொழுதும் இல்லை என்ற பஞ்ச் வசனத்தோடு நடிகர் ரஜினி அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார்'' என்று சொல்லுகிறார்.

ரஜினியை  அரசியலுக்குக் கொண்டு வருவோம் என்று சொல்லக்கூடிய பூணூல் புரோக்கர் இருக்கிறாரே,  அவருடைய பத்திரிகை -  .வெ.ரா.வைப்பற்றி எழுது வோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, மூக்கறுப்பட்டு இருக்கின்ற பரிதாபத்திற்குரிய  முத்தண்ணாக்களாக இருக்கக்கூடிய அவர் என்ன எழுதுகிறார்,

‘‘ரஜினி கட்சி எப்படி வரும் என்றால், ரஜினி கட்சி, பா..., பா..., .தி.மு..விலிருந்து விலகி வருவோர் - .மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அணி சேர்ந்து, தி.மு..வுக்கு பலத்த போட்டியை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்று அரசி யல் விமர்சகர்கள் சிலர் நினைக்கிறார்கள்.''

தி.மு..வை தோற்கடிக்க முடியாது -

தொல்லை கொடுப்போம் என்கிறார்கள்

இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள், தி.மு..வை தோற் கடிக்க முடியாது - தொல்லைதான் கொடுப்போம் என் கிறார்கள். உன்னுடைய தொல்லையும் சரி, இதையெல்லாம் விட தி.மு.. பார்த்திருக்கிறது. 1971 இல் பார்க்காததா? எத்தனை தேர்தலைப் பார்த்தவர்கள் இன்னமும் எங்க ளைப் போன்றவர்கள் உயிரோடுதான் இருக்கிறோம். இன்னமும் களத்திற்கு    வருவோம். அதற்கு அவசியமே இல்லாமல், எதிரிகள் தங்களுடைய கம்பெனியை இப் போதே மூடிக் கொண்டார்கள்.

இன்றைக்கு என்ன சூழல்?

ரஜினியைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வராத தற்கு ஒரு காரணத்தை சொன்னார். ஏற்கெனவே அவ ருக்கு உடல்நிலை சரியில்லை என்பதைப்பற்றி ஆங்கிலஇந்து' பத்திரிகையில்    தலையங்கமாக  தெளிவாக   எழுதி யிருக்கிறார்கள்.

 ஆங்கிலஇந்து' பத்திரிகை தலையங்கம்!

அந்தத் தலையங்கத்தை தமிழாக்கம் செய்து அப் படியே தருகிறோம். (31.12.2020)

‘‘2021ஆம் ஆண்டில் ஓர் அரசியல் கட்சியைத் துவங்குவது என்ற தனது திட்டத்தை புகழ் பெற்ற மூத்த நடிகர் ரஜினி காந்த் கைவிட்டதன் மூலம் தனது தடுமாற் றத்தை மறுபடியும் ஒரு முறை அவர் வெளிப்படுத்தி உள்ளார். 2020 டிசம்பர் 3 ஆம் தேதியன்று தனது அரசியல் பிரவேசத்தை மிகுந்த விளம்பரத்துடன் அறிவித்ததற்கு முற்றிலும் நேர் எதிரானதாக இந்த முடிவு அமைந்துள்ளது. அதற்கு அவர் கூறும் மோசமான தனது உடல்நிலை  மற்றும் புதிய கோவிட்-19 தொற்றுநோய் கிருமியின் அச் சுறுத்தல்  உள்ளிட்ட காரணங்கள்  நன்றாக  அறியப்பட்ட வையாக இருந்த போதிலும்,  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும் 60 வயதைக் கடந்த இந்த நடிகர், தமிழ்நாட்டு அரசியலில் நேர்மையான, நம்பத் தகுந்த ஒரு மூன்றாவது  அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று அவரது விசிறிகளும் ஆதரவாளர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டு அரசியல் கடந்த 40 ஆண் டுகளாக இரண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்துள்ளது.  தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தங்களது அரசியல் ஆற்றலை மெய்ப்பித்துக் காட்டியுள்ள ஆட்சியில் இருக்கும் ...தி.மு.கட்சியும், கடந்த காலத்தில் ஆட்சி செய்த தமிழக அரசியலில் இப்போது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும்.  தி.மு.கட்சியும் 1977 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து 63 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளன. அதனால் சிறிய இதர கட்சிகள் இப்போது குறிப்பிட்ட ஒரு சிறிய வரை யறுக்கப்பட்ட  எல்லைக்குள் மட்டுமே செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில்  இருப்பதாகக் கருதப்பட்ட  பா... 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதர வைப் பெற இயலும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தது. ஆனால், எந்த ஒரு கூட்டணிக்கு அவர் இப்போது ஆதரவு தெரிவித்தாலும், அது ஒரு நிலையான முடிவாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. 1996 சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி காந்த் விடுத்த அறிக் கையே இதன் காரணம். 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பா... - ...தி.மு.. கூட்டணிக்கு ரஜினிகாந்த் அளித்த ஆதரவை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் தி.மு.. தலைமையிலானயே கூட்டணி வெற்றி பெற்றது.

திராவிட கட்சிகளுக்கு எதிராக பலம் பொருந்திய ஒரு மாற்று சக்தியைத் தேடித் திரிபவர்கள், திரைப்படத் தொழிலில் ஈடுபட்டவர்களைத் தாண்டி தேடுவதற்கான வாய்ப்பினை ரஜினிகாந்தின் இந்தக் கதை அளித்துள்ளது. அரசியல் அறிவு, தந்திரம், மற்றும் ஆணிவேர் போன்ற கட்சிப் பணிகள் ஆற்றிய அனுபவம் ஆகியவை  இல்லாமல் இருப்பதை வெறும் சினிமா கவர்ச்சியினால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. பொது மக்களின் குறைகளையும், அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை களையும் பற்றி எடுத்துப் பேசி பிரச்சாரம் செய்து மட்டுமே எந்த ஓர் அரசியல் இயக்கமும் உருவாக்கி கட்டமைக்கப்பட இயலும், கட்டமைக்கப்பட வேண்டும். ஆன்மிக அரசியல் நடத்துவது, லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுவது  போன்ற தெளிவற்ற குழப்பம் நிறைந்த செயல்பாடுகளைத் தவிர்த்து மக்களுக்கு அளிக்க இயன்ற உறுதியான வேறு எந்த செயல்திட்டங்களும் ரஜினிகாந்திடம் இல்லை. வளர்ச்சியின் வரைபடத்தில் தமிழ்நாடு நல்லதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது என்ற போதிலும்,  அதன் பங்கிற்கு உரிய நாள்பட்ட தீர்க்கவே முடியாத பிரச்சினை களும் இருக்கத்தான் செய்கின்றன. பிரசவ காலத்தில் இறந்து போகும் தாய்கள் மற்றும் சேய்கள் இறப்பு விகிதம் மாவட்டங்களிடையே ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருப் பது மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை ஆகிய பிரச்சினைகள் உள்ளன. பொருளா தார நிலையில் பலவீனமாக இருக்கும் ஏழை மக்கள் எவ் வாறெல்லாம் பாதிக்கப்படு வார்கள் என்பதை  கோவிட்-19 நோய்த் தொற்று தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விட்டது. மிகுந்த பலத்துடன் உறுதியாக நிறுவப்பட்ட கட்சிகளால் இத் தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட் டில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தி உருவாவதற்கு இந்த பிரச் சினைகள் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகளே அடிப் படையாக அமைந்தவை. ஆனால், பல்வேறுபட்ட சமூகங் களின் பின்னணியைச் சேர்ந்த  தனது ரசிகர்களின் முது கில் சவாரி செய்து கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு குறுக்கு வழியில் வந்துவிட முடியும் என்று இந்த நடிகர் நம்பிக் கொண்டிருந்தது தெளிவாகவே தெரிகிறது. அத்த கைய ஒரு உத்தியும், முயற்சியும் நிச்சயமாக தோல்வி யையே தழுவும்.

திரைப்படக் கதை வசனத்தைப் போல அல்லாமல், பண்படாத முரட்டுத்தனம், கொந்தளிப்பு மற்றும் தடுமாற் றங்கள் நிறைந்ததொரு அரசியல் வாழ்வில் ஈடுபடு வதற்கு அவரது 40 ஆண்டுகால திரை வாழ்க்கை அவரைத் தயார் செய்யவில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டிய ரஜினிகாந்தோ, ஆட்சி அதிகாரம் ஒரு தங்கத் தாம் பாளத்தில் வைத்து தனக்கு வழங்கப்படும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்ததாகவே தெரிகிறது.''

ரஜினி அவர்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்து கலைத்துறைக்கு சேவை செய் யட்டும். அவரை கேலி செய்வதற்காக இதனை சொல்ல வில்லை.

பழைய பாட்டு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது,

‘‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி -

மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப்

போட்டுடைத்தாண்டி!'' - என்ற கடுவெளி சித்தர் அவர்களின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அதுபோல் அவரை  நான் கேலி செய்ய விரும்ப வில்லை!

விமர்சனங்களை எதிர்கொள்கிறவர்கள்தான் பொதுவாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்!

இப்படி பல விமர்சனங்கள் வரும். பொது வாழ்க்கை என்றாலே, விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும். யார் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் களோ, அவர்கள்தான் பொதுவாழ்க்கைக்கு வருவதற்குத் சரியான தகுதியானவர்கள்.

பெரியார் எதிர்நீச்சல் அடித்தவர்!

நாங்கள் அதிலே ஊறித் திளைத்தவர்கள் - தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடித்தவர் - பெரியார்மீது செருப்பு வீசி இருக்கிறார்கள் - மலத்தை வீசியிருக்கிறார்கள் - அவருடைய துணைவியாரைப்பற்றி சுவரில் அசிங்கமாக எழுதி வைத்தார்களே - அவருடைய வயது என்ன? அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல், பக்குவப் பட்டவர் தந்தை பெரியார்.

ஆனால், ரஜினி அவர்களுடைய வயது என்ன? அரசியல் விமர்சனங்களைத் தாக்குப் பிடிக்க முடியாதவர் - எனவேதான் அவர் அதனைப் புரிந்துகொண்டு, அரசிய லிலிருந்து ஒதுங்கி விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவரை நம்பி ஏற்பாடு செய்த வேறு சில அரசியல் புரோக்கர்கள் இன்றைக்குக் கைபிசைந்து நிற் கிறார்கள். ஒருவர் இருக்கிறார், அவர் "சீப் மினிஸ்டர் மேனுபேக்சரிங் கம்பெனி". ஒவ்வொரு முறையும் அவர் என்ன செய்வார் என்றால், "அவரை நான் முதலமைச்சராக ஆக்குகிறேன், இவரை நான் முதலமைச்சராக ஆக்குகி றேன்" என்று சொல்வார்.

அதுகுறித்து யாரும் கேட்டால் ஒரு கார்ட்டூன் வெளி வந்திருக்கிறது. கச்சேரி நடத்துவதற்கு தாளம் போடுகிற வர்கள், ஒத்து ஊதுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், பாடகர் (ஏற்பாடு செய்த புரோக்கர்) பாடாமல் புறப்பட்டு போகிறார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வருகின்ற வைத்தி போன்று, ‘‘போகாதே, போகாதே'' என்று பாடக் கூடிய அளவிற்கு.

அரசியல் புரோக்கருக்கு ஆசை உண்டே தவிர, வேறெதுவுமில்லை

அந்தப்  புரோக்கரைப் பொறுத்தவரையில், இன்னொரு உதாரணத்தைக்கூட நம்மால் சொல்ல முடியாது; ‘‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை'' என்று சொல்ல முடியாது; ஏனென்றால், அவருக்கு மீசையே இல்லை!  அவரைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசிய மில்லை. அவருக்கு ஆசை உண்டே தவிர, வேறெதுவு மில்லை.

அவரோடு பேரம் பேசியவர்கள், பேரக்காரர்கள் அத்தனை பேருக்கும் கனவு சிதைந்த கனவாகிவிட்டது. உடைந்த பாத்திரமாகிவிட்டது. எனவேதான், முதல் வியூ கத்தில் தி.மு..வினுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டது.

.தி.மு..வை உடைக்க சதி செய்கிறார் ஸ்டாலின் என்று பேசுகிறார் அந்தக் கட்சியைச் சார்ந்தவர். அவர் எதற்காக உங்கள் கட்சியை உடைக்கவேண்டும்; உங்களு டைய நிலை என்ன? ஒரு கட்சிக்கு இரண்டு தலைவர் இருப்பார்களா? ஒரு கட்சிக்கு இரண்டு ஒருங்கிணைப் பாளரைப் போட்ட வரலாறு வேறு எங்கேயாவது உண்டா? அதற்குமேல் அதற்குள் போக நான் விரும்பவில்லை - நாகரீகம் கருதி!

இதுமட்டுமல்ல, எங்களின் தேர்தல் சின்னத்தையே  முடக்க சதி (இரட்டை இலை) என்று சொல்கிறார் ஒரு அமைச்சர்!

சின்னத்திற்கு ஆபத்து - கூட்டணியில் எந்தக் கட்சி இருக்கிறது என்று தெரியாது - முதல்வர் வேட்பாளர் அறிவித்ததில் பிரச்சினை இவையெல்லாம் அந்தக் கூட்டணியில் இருக்கிறது.

‘‘வேலினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை''

பா... புதிதாக சிலரை இறக்குமதி செய்த ஒருவர் வேலைத் தூக்கிக் கொண்டு வந்தார். பா... தேர்தல் அறிக்கையில் மோடி அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். வேலை கொடுங்கள் என்று இளைஞர்கள் கேட்டால், கையில்வேலை' கொடுத்து விட்டார், அதுவும் அவருடைய கட்சிக்காரரிடம்! இவர் வேலைத் தூக்கிப் போனார், அவருடைய கட்சியைச் சார்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘வேலினால் எந்த வேலையும் ஆகாது'' என்று சொல்லிவிட்டுப்போய் விட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., பா...வினர் இப்போது புதிதாக  ஒரு திட்டம் போட்டு, தமிழ் மேல் பற்று - தமிழ்நாட்டின்மீது பற்றாம். பிரதமர் மோடி, பாரதியாரைப்பற்றி தமிழில் பேசுவார், திருவள்ளுவரைப்பற்றி பேசுவார். வணக்கம் என்று சொல்வார்.

இன்றைக்கு ஒரு செய்தியை நண்பர் ஒருவர் சொன் னார், "ஆகாஷ்வாணி" என்பதை அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சிக்கு வந்தவுடன், "ஆல் இண்டியா ரேடியோ" என்று மாற்றினார். அதை இப்பொழுது மீண்டும் ஆகாஷ்வாணி என்றுதான் மாற்றவேண்டும்; அந்தந்த வட்டாரப் பகுதிகளில் இருக்கும் பெயர்களை எல்லாம் நீக்கிவிடவேண்டும் என்ற உத்தரவு வந்து, அது செயல்படவிருக்கிறது என்ற தகவலை, அந்தத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர் இன்று மதியம் சொன்னார். இதுபோன்ற ஆபத்துகளை உங்களால்தான் போக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

டில்லியில் போராடும் விவசாயிகளுடைய

நிலை என்ன? 

மத்திய அரசின் வேளாண் திட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டில்லியில் போராடும் விவசாயிகளுடைய நிலை என்ன?  கொட்டும் பனி, இதுவரையில் வரலாறு காணாத பனி - நேற்றுகூட ஒரு விவசாயி தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து, இதன்மூலமாவது மத்திய அரசின் மனம் மாறாத என்று எழுதி வைத்திருக்கிறார். அவருக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகிறோம்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆட்சி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை , ஆகவே அந்தச் சட்டங்களை ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார்களே, அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

விவசாயம் என்பது, 7 ஆவது அட்டவணையில், மிக முக்கியமாக இருக்கின்ற 14 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக, மாநிலத்தினுடைய அதிகாரமாகும்.

முதலமைச்சரின் மாவட்டத்தைச் சேர்ந்த

விவசாயிகள் வடிக்கும் ரத்தக் கண்ணீர்!

மாநில முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல், மாநில மக்களைப்பற்றி கவலைப்படாமல் எல்லா செயல்க ளும் இப்பொழுது நடைபெறுகின்றன. ஏற்கெனவே 8 வழிச் சாலைகள் என்று சொல்லி, தலைமேல் கத்தி தொங் கிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட்டு ஒவ் வொரு விவசாயியும் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக் கிறார்கள். எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர் முதலமைச்சராக இருக்கிறாரோ, அந்த மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள்கூட ரத்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்ற சூழல்தான். இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போனால், அது நீண்டு கொண்டே போகும்.

எனவே, நண்பர்களே! கூட்டணி என்பதற்கு, அவர்கள் யாரையோ நம்பினார்கள், ஆனால், அந்த முதலீடு வர வில்லை - அந்தக் கச்சேரியே நடைபெறவில்லை. தொடங் குவதற்கு முன்பாகவே முடிந்துவிட்டது என்ற அளவிற்கு, கருவில் உருவாவதற்கு முன்பே, கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது என்ற சொல்லக் கூடிய சூழ்நிலையில், இன்றைக்கு வேறு வழியில்லாமல், வேறு என்ன உத்திகளைக் கையாளுவது என்று நினைத்து, வடக்கே இருக்கக்கூடிய ஒரு பார்ப்பன அம்மையாரை இங்கே கொண்டுவரலாமா? என்கிற ஒரு பேச்சு அடிபடுகிறது.

எப்படி இருந்தாலும், இது பெரியார் மண் - இது திராவிடர் மண் அதனை முறியடிப்போம்.

- தொடரும்

Comments