ஆமாம், நான் பிரபாகரனை இழுத்துவந்து கொலை செய்தேன்!

இலங்கை அதிபரின் வாக்குமூலம்

அம்பாறை, ஜன.11 விடுதலைப் புலிகளின் தலைவர் ‘‘பிரபாகரனை நந்திக் கடலி லிருந்து நாய் போல இழுத்து வந்தேன்:  கொலை செய்தேன்'' என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள் ளது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே,  அம் பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத் துகல கிராமத்தில் நடந்த ‘‘கிராமத்துடன் உரையாடல்'' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “பாதுகாப்புச் செயலாளராக தான் இருந்தபோது, மாத் தளன் சந்தியில் தன்மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பிரபாகரனை பிடித்து நாய்போல் இழுத்துவந்து நந்திக்கடல் உப்பங்கழியில் வைத்து கொலை செய்ததாகப் பேசினார். மேலும் தான் எதற்கும் தயாரானவர் என்றும், ஆனால், மக்களுக்கு சேவை செய்வதே தனது தேவையாக உள்ளது எனவும் அதிபர் கோத்தபாய  ராஜபக்சே கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கையின் பாது காப்புச் செயலாளராக இருந்தவர் கோத்த பாய ராஜபக்சே. அந்தப் போரில் மிகப் பெரிய மனித உரிமை மீறல்,  இனப் படுகொலை மற்றும் போர்நீதிகளுக்கு புறம்பாக கொடூரமான இன அழிப்பை முன்னின்று நடத்தியதற்கு பெரிதும் காரண மாக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சே அத்துடன், மோசமான போர்க்குற்றங் களுக்குக் காரணமாக இருந்ததாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான நீதிகேட்டு வழக்குத்தொடர்ந்துள்ள உலக வழக்கு ரைஞர்கள் அமைப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோத்தபாய ராஜபக்சே கூறியமை தொடர் பில், வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாள ருமான அனந்தி சசிதரன்  கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,

‘‘எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தி யை சிங்கள மக்கள் மத்தியில் - இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது.''

‘‘உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் இறப்பு சான் றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். பிரபாகரனை இவர்கள் கொன்றிருந்தால், அவரின் மரபணு பரிசோதனையை மேற் கொள்ள ஏன் இவர்கள் உடன்படவில்லை என்கிற கேள்வியினையும் முன்வைக்க வேண்டியுள்ளது'' என்று அவர் குறிப் பிட்டார்.

‘‘எனவே தேசியத் தலைவர் பிர பாகரனை 'நாய்போல இழுத்துச் சென் றேன்' எனக் கூறுகின்ற, வக்கிரம் நிறைந்த அவரின் பேச்சை, மேற்சொன்ன கருத்து களினால் நிரூபிக்க முடிந்தால் நிரூபிக் கட்டும்" என்று சவால் விட்ட அவர் "சிங்கள மக்களை வெறுமனே உசுப்பேற்ற வும், தற்போது இழந்து கொண்டிருக்கும் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக வுமே, இந்த சொற்களை அவர் பயன் படுத்தியதாக நான் கருதுகிறேன்".

‘‘கடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சேவிடம் ஊடகவியலாளர்கள்; 'நீங்கள் போர்க்குற்றம் புரிந்துள்ளீர்களா' எனக் கேட்டபோது, யுத்த காலத்தில் தான் ஓர் அரச அதிகாரியாக மட்டுமே இருந்த தாகத் தெரிவித்திருந்தார்.  சமீபத்தில் அவர் ஆற்றிய உரையின் ஊடாக, தான் ஒரு போர்க்குற்றவாளி என நிரூபித்திருக் கின்றார்" எனவும் அனந்தி சசிதரன் தெரி வித்தார்.

அன்றைய ராணுவத்தலைமை தளபதி  பொன்சேகா,  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி மூச்சு வரை கடுமையாக போராடினார், அவரைப் போன்ற ஒரு மாவீரனை மீண்டும் பார்க்க முடியாது என்று 2015 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் தற்போது இலங்கை அதிபர் கோத்தபாய விடுதலைப்பு புலிகளின் தலைவர் பிரபாரகன் பற்றி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

 அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையிடம் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் இன்றுவரை இது குறித்து அந்நாட்டு அரசு எந்த ஒரு கருத்தும் தெரி விக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையின் கிழக்கு மாவட்டமான அம்பாறை தமிழர்கள் வாழும் பகுதியாகும்.  ஆனால் அங்கு சிங்களவர்களை,  தமிழர் களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குடியேற வைத்ததன் மூலம் இப்போது அங்கு தமிழர்களுக்கு சமமாக சிங்களவர் களின் குடியிருப்பும் வந்துவிட்டது, இந்த நிலையில் இலங்கை அதிபர் சிங்களவர் களை தமிழர்களுக்கு எதிராக தூண்டும் விதமாக இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments