சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழியின் சிறப்பு

"இனிச் சமஸ்கிருத மொழியின் கண்ணே பால் வகுப்புச் சொன்னோக்கத் தாலேற்பட்டுளதேயன்றிப் பொருணோக்கத்தாலேற்பட்டிலது. உதாரண மாகக் கையெனப் பொருள்படும்கரம்' என்ற சொல் ஆண்பால், மனைவி யெனப் பொருள்படுஞ் சொற்களிலே, ‘தாரம்' என்பது ஆண்பால், ‘களத் திரம்' என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஆராற்றனமைக் கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மெழியிலோ பால் வகுப்பெல்லாம் பொருணோக்கத்தாலேற் பட்டுளவேயன்றிச் சொன்னோக்கத்தாலேற்படவே யில்லை. இது தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்று வட நூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோடியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடையனவாமாறு காண்க! தமிழ்மெழியின் வழிமொழிகளெல்லாம்பொருணோக்கப் பால் வகுப்புச் சிறப்புடையன. இவ்வுண்மை யொன்றே தமிழ் மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத்தக்க சான்று பகரும்"

- வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார், பி..,

நூல்: ‘தமிழ்மொழியின் வரலாறு‘, பக். 133

Comments