சிதம்பரம், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணமே பெற வேண்டும்

மருத்துவர்கள் தொடர் முழக்கப் போராட்டம்!

சென்னை, ஜன.12- இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதைப் போன்றே சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர் களின் தொடர் முழக்கப் போராட் டம் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் (10.1.2021) பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்து வர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் .அறம் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு மருத் துவ மாணவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத் துவர் அரிகணேஷ், மருத்துவர்கள் ஜி.இரமேஷ், .அருண்குமார், மருத்துவ மாணவர் கணபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொடர் முழக்கப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மக்களவை தொகுதி தி.மு. உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், மதிமுக செய்தித் தொடர்பாளர் வழக் குரைஞர் அந்தரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந் திரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மருத்துவர் விஷ்ணு பிரசாத், சமூக சமத்துவத் திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் .ஆர்.சாந்தி, எழுத்தாளர் மருத்துவர் .சிவபாலன், மருத்துவப் பணி யாளர் கூட்டமைப்பின் தலைவர் பி.காளி தாசன், மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சூரியா,அபர்ணா, சதீஷ், அஃப் ரோஸ் உள்பட பலர் போராட் டத்தில் கலந்துகொண்டு உரையாற் றினர். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் நிறைவு உரையாற் றினார்.

தமிழக சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. இப்பல்கலைக் கழகத்திற்கு 2013 முதல் தமிழக அரசு ரூ.2800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த நிதி நிலை அறிக்கையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி யாக செயல்படும் என துணை முதல்வர் .பன்னீர்செல்வம் அறிவித்தார். அது கடலூர் அரசு மருத் துவக் கல்லூரி என்ற பெயரில் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. அரசே ஏற்ற பிறகும், அக் கல்லூரியின் கல்விக் கட்டணமும், பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமும் ஏற்கெ னவே இருந்த அளவிற்கே நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இளநிலை மருத்துவக் கல்விக்கு ரூ 5.44 லட்சம் என்றும், முதுநிலை மருத்துவக் கல்விக்கு ரூ 9.6 லட்சம் வரையிலும், இளநிலை பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 3.5 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ.7.8 லட்சமும் நிர்ண யிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரி களின் கட்டணங்களை விட மிக மிக அதிகமாகும்.

அதே போல், ஈரோடு மாவட் டம், பெருந்துறை அய்.ஆர்.டி. மருத் துவக் கல்லூரியையும் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற் பொழுது அது, ஈரோடு மாவட்ட அரசு மருத் துவக் கல்லூரியாக செயல்படுகிறது. அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட் டணத்தை செலுத்த முடி யாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின் றனர். இது ஏழை - எளிய குடும்பங் களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதி ரானது.

எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை கல்விக் கட்டணமான ரூ.13,670, முதுநிலை மருத்துவக் கல்விக் கட்டணமான ரூ.27,500 கட்டணங்களையே இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக் கும் நிர்ணயிக்க வேண்டும்.

கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ.11,610அய் மட் டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களின்  இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments