விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

முதல்வருக்கு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கடிதம்

சென்னை,ஜன.2, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ருமான தளபதி மு..ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு நேற்று (1.1.2021) எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து,  (31-12-2020) நேற்று கேரள சட்ட மன்றத்திலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர் மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட் டுள்ளது.

கடும் குளிரையும் பொருட்படுத் தாமல், சாலைகளிலேயே சமைத்து, அதை உண்டு, கடந்த 37 நாட்களாக தொடர்ந்து இரவும் பகலுமாக, பல லட்சக்கணக்கான விவசாயப் பெரு மக்கள் டில்லி தலைநகரில், திடமான - தீர்மான சிந்தையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்ச ஆதார விலை இல்லாத- கார்ப் பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது.

முதன்முதலில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து - இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத் தின் கட்டாயம்.

தங்களின் உணர்வுகளை தமிழ் நாடு சட்டமன்றம் எதிரொலித்து, டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தோளோடு தோள் நின்று துணை புரியவேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயப் பெருமக்களின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது. எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்; அதற்காக தமிழ் நாடு சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Comments