லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் நாகதேவன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

லண்டன் மாநகரில் ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் மிகச் சிறப்பாக பல ஆண்டுகாலமாக இயங்கி வரும் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவரும், திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தலைவருமான அருமை நண்பர் நாகதேவன் அவர்கள் லண்டனில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை நண்பர் ஹரிஷ் கமுகக்குடி மாரி முத்து அவர்களின் மூலம் அறிந்து மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தோம்.

மறைந்த நண்பர் நாகதேவன் அவர்கள் சிறந்த மொழிப் பற்றும், இனப்பற்றும், மானிடப் பற்றும் கொண்ட அருமை யான தோழர். பலமுறை நம்மை வரவேற்று அன்புடன் நிகழ்ச்சிகள் நடத்திய பெருந்தகையாளர். தொண்டறச் செம்மல்.

அவரது மறைவு, பெரும் இழப்பை அந்த அமைப்புகளுக்கு ஏற்படுத்தும்; அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அந்த அமைப்பினர்கள் ஆகியோருக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்!


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

27.1.2021 

Comments