கோட்சே நூலகத்தைத் திறந்த இந்து மகாசபா: தேசியவாதி எனவும் புகழாரம்!

இந்தூர், ஜன.12 அகில பாரதிய இந்து மகாசபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாலியரில்  காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது என  நூலகம் ஒன்றைத் திறந்துள்ளது.

தவுலத் கஞ்சில் உள்ள மகாசபாவின் அலுவலகத்தில் 'கோட்சே ஞான ஷாலா' திறந்து வைக்கப்பட்டது.   காந்தியின் படுகொலைக்கு கோட்சே எவ்வாறு திட்டம் தீட்டினார், அவருடைய கட்டுரைகள் மற்றும் உரைகள் பற்றிணீயவைகள்  இதில் உள்ளன.

கோட்சே என்ற உண்மையான தேசியவாதியை உலகிற்கு முன் வைக்க இந்த நூலகம் திறக்கப்பட்டது. அவர் பிரிக்கப்படாத இந்தியாவுக்காக நின்று, இறந்தார். இந்தக் காலத்து இளைஞர்கள் கோட்சேவின் உண்மையான தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நூலகத்தின் நோக்கம்என மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் கூறினார். ஜவகர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக இந்தியா பிளவுபட்டுள்ளதாக பரத்வாஜ் குறிப்பிட்டார். மேலும், இவர்கள் இருவரும் தேசத்தை ஆள விரும்பினார்கள். அதே நேரத்தில் கோட்சே அதை எதிர்த்து நின்றார் என்றும் அவர் கூறினார். காந்தியைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட நகரமான குவாலியர், கோட்சேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூலகத்தின் தளமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கோட்சேவுக்கு அர்ப் பணிக்கப் பட்ட ஒரு கோயில் மகாசபாவால் குவாலியர் அலுவலகத்தில் அமைக் கப்பட்டது. காங்கிரசின் சலசலப்பைத் தொடர்ந்து இது அகற்றப்பட்டது. இதற்கிடையில், இந்தியப் பிரிவினை என்பது   காந்தியின் தவறு என்று இந்து மகாசபா செய்தித் தொடர்பாளர்  ராமேஸ்வர் சர்மா கடந்த

ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “இந்தியாவை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் முகமது அலி ஜின்னா வெற்றி பெற்றது   காந்தியின் தவறுஎன்று அவர் போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments