மத்திய அரசு - விவசாயிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

புதுடில்லி,ஜன.19 மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங் களை திரும்பப்பெறக்கோரி டில்லி எல்லையில் விவசாயிகள் 55ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர விவசாய சங்கங் களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதில் பிரச்சினைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட் டுள்ளது.

உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளபோதும் விவ சாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவ சாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த் தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10ஆம் கட்ட பேச்சு வார்த்தை இன்று (19ஆம் தேதி) நடை பெறுவதாக இருந் தது.

ஆனால், இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள் ளது. பேச்சுவார்த்தை நாளை (20ஆம் தேதி) நடைபெறும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments