மின்னணு வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது

புதுடில்லி, ஜன.25 தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநி லங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே தொடங்கி விட் டதுஇதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்த தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு உள் ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறை யிலான வாக்காளர் அடையாள அட்டை.

கரோனா பரவல் காரணமாக, பல்வேறு பணிகள் தற்போது மின்னணு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையம், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல நுழைவு இடங்களில் டிஜிட்டல் முறையிலான ஆவ ணங்களே தற்போது பயன்படுத் தப்படுகிறது. இதைப்போல வாக் குச்சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான மின்னணு வாக் காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய் துள்ளது.

இந்நிலையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று மின் னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக் கும். அவர்கள் தங்களது செல் போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கெ னவே இடம் பெற்று உள்ள, செல் போன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்கு பிப் ரவரி 1-ஆம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வலைத்தளங்களில் அவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என்றும், ‘கியூ ஆர் கோடுபயன்பாட்டை கொண்ட தாக அந்த அட்டை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதை செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளலாம்.

இதனிடையே இந்தியா முழுவதும் இன்று 11ஆவது தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக் கப்படுவதையொட்டி, தலைநகர் டில்லியில் நடைபெறும் நிகழ்ச் சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்க இருக்கும் குடியரசுத் தலைவர், ‘’ஹலோ வாக்காளர்கள்’’ என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் தொடங்கி வைக்கிறார்.

 

 

 

 

Comments