எம்.என்.ராயும் - தந்தை பெரியாரும்

எம்.என்.ராய் மன பேந்திர நாத் ராய்

(1887 - 1954)

எம்.என். ராய் வங்காளத்தில் அர்பிலியா என்ற ஊரில் 1887 மார்ச்சு 21இல் பிறந்தார். 1905இல் வங்காளப் பிரிவினையை எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நடந்தன. பள்ளி மாண வனாக இருந்த ராய் இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட் டார். 1907இல் வெடிகுண்டு செய்வதிலும், துப்பாக்கியால் சுடுவதிலும் பயிற்சிபெற்றார்.

ஆயுதங்கள் வாங்குவதற்காக 1916இல் ராய் அமெரிக்காவுக்குச் சென்றார். நரேந் திரநாத் பட்டாச்சாரியா என்ற தன் இயற் பெயரை மனபேந்திர நாத்ராய் (Manabendra Nath Roy - M.N.Roy) என்று மாற்றிக்கொண்டார். அமெரிக்காவில் காவல்துறை அளித்த நெருக்குதலால்மெக்சிகோவுக்குச் சென்றார்.

அமெரிக்காவில் காரல்மார்க்சு நூல் களைப் படித்தார். மெக்சிகோவில் கம்யூ னிஸ்டு கட்சியை உருவாக்குவதில் முதன் மையான பங்காற்றினார். ஸ்பானிய மொழி யில் மார்க்சியம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். 1919இல் மாஸ்கோவில் இரண் டாவது அகிலம் நடைபெற்றது. மெக்சிகோ கம்யூனிஸ்டு கட்சி ராய் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. இரண்டாவது அகி லத்தில் காலனிய நாடுகளின் தேசவிடுதலை குறித்து லெனினுக்கும், ராய்க்கும் கடுமை யான கருத்து முரண்பாடு எழுந்தது. ராயின் திருத்தத்தில் ஒரு பகுதியை லெனின் ஏற்றுத் தீர்மானத்தை மாற்றி அமைத்தார். இரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராளராக சீனா வில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். நேருவின் அழைப்பை ஏற்று 1931இல் காராச்சியில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ராய் மீது ஹவுரா (1910), கான்பூர் (1924), மீரட் (1929) சதி வழக்குகள் இருந்தன. மாறுவேடத்தில் இருந்த  ராய்  கைது செய்யப்பட்டார். 1931-36  சிறையில் இருந்தார். 1936இல் காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசுக் கட்சிக்குள் சோச லிஸ்டுகள் செல்வாக்குப் பெறமுடியாது என்பதை உணர்ந்து, 1939இல் காங்கிரசி லிருந்து வெளியேறினார். 1940இல் ரேடிகல் டெமாக்கரடிக் கட்சியைத் தொடங்கினார். 1941 பிப்பிரவரியில் தென்னிந்தியப் பய ணத்தை மேற்கொண்டார். தந்தை பெரியா ருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். தாம் நிறுவிய ரேடிகல் டெமாக்கரடிக் கட் சியின் முதலாவது மாநாட்டைத் தொடங்கி வைக்க தந்தை பெரியாரை கல்கத்தாவுக்கு அழைத்தார். 27.12.1944இல் தந்தை பெரியார் அம்மாநாட்டில் பங்கேற்றார். எம்.என்.ராய் தந்தை பெரியாரை சிறந்த நாத்திகத் தலை வர் என்று கூறிப் பாராட்டி வரவேற்றார். இக்கட்சி 1946 தேர்தலில் படுதோல்வி கண்டதால் 1948இல் இக்கட்சியைக் கலைத் தார். புதிய மாந்தநேயம் என்ற கோட் பாட்டை முன்மொழிந்தார்.

1954 சனவரியில் மறைந்தார். மாஸ் கோவில் மார்க்சியத் தத்துவப் பயிற்சி வகுப் பில் ஹோசிமின் இவருடைய மாணவர். உலகில் எல்லா நாடுகளிலும் இருந்த கம்யூ னிஸ்டுக் கட்சித் தலைவர்களுடன் நெருக் கமான உறவுபூண்டிருந்த ஒரே இந்தியர் இவரே! அவரது நினைவு நாளை நினை வுக்கு கொண்டுவந்து கூறினோம்.


Comments