கருப்பின மக்களின் வெற்றி!

அமெரிக்கா ஒரு புதிய தொடக்கத்தில் உள்ளது. ஆம்! கருப்பின மக்கள் வெற்றி பெற்று வருகின்றனர்!

தலைவர் ஜோ பைடன் முதலில் தோற் றுக் கொண்டிருந்தார். அவ்வளவுதான் என்று முடிவு கட்டினார்கள். கருப்பினத் தலைவர்களில் முக்கியமானவர் ஜிம் கிளைபர்ன். தென் கரோலினா மாநிலத்தில் கருப்பின மக்களின் முழு ஆதரவுடன் பைடனை வெற்றி பெற வைத்தார். பின் னர்தான் பைடன் அவர்களின் போட்டியே முடிவானது. தலைவர்  தேர்தலில் மிகவும் முக்கிய பங்கு வகித்தது ஜியார்ஜியா மாநிலம். அங்கு வெள்ளையரின் ஆட்சி கொடி  கட்டிப் பறந்து கொண்டிருந்தது. பத்தாண்டுகளாக பல எதிர்ப்புக்களைத் தாண்டி கருப்பின மக்களை வாக்குப் பதிவு செய்ய வைத்துப்  பெருமளவில் வாக் களிக்க வைத்தவர் ஸ்டேசி ஆபிராம்சு எனும் பெண்மணி. இவர் மாநில ஆளுநர் போட்டியில் குறைந்த வாக்குகளில் தோல் வியுற்றார். ஆனால் சளைக்காமல் வேலை செய்து தலைவர் பைடன், துணைத் தலைவர் கமலா ஹேரிசின் வெற்றிக்குப் பாடுபட்டார். இவரே துணைத்தலைவராக வரலாம் என்றும் பேசசு அடிபட்டது.

அதைவிட முக்கியமாக, இரண்டு மேல வைத் தொகுதிகளிலிலும் மக்களாட்சிக் கட்சியை வெற்றிபெறச் செய்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று வெற்றி பெற்றிருந்தால் கூட டிரம்பின் குடியரசுக் கட்சி 51 இடங்கள் பெற்று 100 பேர் உள்ள மேல்சபையின் பெரும்பான்மையைத்  தொடர்ந்து பெற்றிருக்கும். அங்கு வலது சாரி வெறியரான மிட்ச் மெக்கானல் தலைமை ஏற்று பல தொந்தரவுகள் தந்தி ருப்பார். அவர் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் வெறி பிடித்த அரசியலை நடத்திக் கொண்டிருந்தார். ஒபாமா அவர்களுக்கு மிகவும் பெரிய முட்டுக்கட்டையாக எது வும் அவரை செய்யவிடாமல் தடுத்து வந்தவர். உச்சநீதிமன்ற நியமனங்களில் வெறித்தனமாக நடந்து கொண்டார். இப் போது இரு  கட்சிகளும் 50-50 என்றிருப் பதால் அந்த அவையின் தலைவர்- அமெ ரிக்க குடியரசுத் துணைத் தலைவர் கமலா ஹேரிசு 51 வது வாக்காகத் தன வாக்கை அளித்து பைடனின் கொள்கைகள் நிறை வேறப் பாடுபடுவார். சக் சூமர் என்பவர் தலைமைப் பொறுப்பேற்பார். முற்போக்குத் திட்டங்கள் கொண்டு வரப்படும்

இன்னும் மிகவும் முக்கியமானது வெற்றி பெற்றவர்களில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் ஆலயத்தின் தலைமை ஊழி யர். ரெவரென்ட் ரேபியல் வார்நாக் எனும் கருப்பினப் போராளி! ஜியார்ஜியா மாநிலத்தின் வரலாற்றை மாற்றி வெற்றி பெற்றுள்ளார். இதுவே புதிய தொடக்க மாகவும் இன்னும் கருப்பின உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி வரவும் வழி வகுக்கும் .

அமெரிக்க வரலாற்றின் மிகவும் வெட் கப்படக்  கூடிய நாட்கள் போய் மீண்டும் உலக அளவில் பெருமையுடன் உலகோடு ஓட்ட வாழும் நாட்கள் சனவரி 20 ஆம் நாள் தொடங்கும்! உலகமே நல் வழியில் செல்ல நல்லவர்கள் பலர் முன் வருவர்.

-சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன்,

தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.

 


Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image