ஒக்கநாடு கீழையூரில் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஒர் எச்சரிக்கை புத்தகம் விநியோகம்

ஒக்கநாடு, ஜன. 12- தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப் படுவோரே பதில் சொல்லுங்கள். "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 17.12.2020 அன்று மாலை 4.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூரில் வணிகர்கள், விவசாயிகள், பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன் தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மாநில இளைஞரணி  துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவல், பெரியார் நகர் .உத்திராபதி, ஒக்கநாடுகீழையூர் மா.அஞசம்மாள் , ரோகித் ஆகியோர் முன்னிலையேற்று பங்கேற்றனர்.

புத்தக விநியோகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Comments