தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

சென்னை,ஜன.20- தமிழகத்தில் நேற்று 172 மய்யங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17 ஆயிரத்து 200 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று (19.1.2021) 9 ஆயிரத்து 305 சுகாதாரப் பணியாளர்கள்கோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 141 பேர்கோவேக்சின்என மொத்தம் 9 ஆயிரத்து 446 பேர் தடுப்பு மருந்தும் செலுத்திக் கொண்டனர். இது 54.92 சதவீதம் ஆகும். தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர்கோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 628 பேர்கோவேக்சின்தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.

Comments