செய்தியும், சிந்தனையும்....!

மகாபெரியவாளுக்கு ஆராதனையாம்!

காஞ்சியில் மகாபெரியவாளுக்கு (சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு) மூன்று நாள் ஆராதனை!

ஏன்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னதற்கா? தமிழை நீஷப் பாஷை என்று கூறியதற்கா? பிராமணர்களுக்காக நான் கம்யூனலாக வாதாடுகிறேன் என்று திருவாய் மலர்ந்ததற்கா?

கைலாயநாதர் இப்பொழுது எங்கே?

கைலாஷ் மானோசரோவர் யாத்திரிகர்கள் தங்க காசியாபாத் நகரில் .பி. பா... அரசு ரூ.132 கோடியில் சத்திரம் கட்டியுள்ளது: - ஆர்.எஸ்.எஸ். இதழ்விஜயபாரதம்', 1.1.2021.

ஆமாம், அந்தக் கைலாய நாதர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? நாத்திக சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் தானே கைதியாக இருக்கிறார்.

கருஞ்சட்டை ஆனதா காவி?

ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கையைக் கொடுக்கிறது, அவ்வளவுதான். மதியால் விதியை வெல்லலாம் என்பதற்கேற்ப, நாம் வாழ்வில் முயன்று வெற்றி பெறவேண்டும்: - ‘விஜயபாரதம்' 1.1.2021

பரவாயில்லையே. ஆர்.எஸ்.எஸ். காவிகளும் கருப்புச் சட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களா?

முன் வருவாரா பிரதமர் மோடி!

அமெரிக்காவில் கரோனா முதல் தடுப்பூசியை அதிபராகப் பதவியேற்கும் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோர் போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இந்தத் தகவலைத் தெரிந்து கொள்ளாமலா இருக்கின்றனர்? மனசாட்சிக் குரல் (மன் கி பாத்) பிரதமராவது முன்வரலாமே!

விவசாயம்பாவத்' தொழில்தானே!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது. விவசாயிகளிடம் மத்திய அரசு திட்டவட்டம். 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - ஜன.15ஆம் தேதி மீண்டும் பேச வருமாறு மத்திய அரசு அழைப்பு!

இருதரப்பும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும்போது, எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் என்ன? விவசாயம் என்ன உயர்தட்டு மக்கள் பிரச்சினையா - பா... அரசு இறங்கி வர!

Comments