அய்சிஎம்ஆர் விஞ்ஞானிகள் பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கு வாய்ப்பு மறுப்பதா?

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு புகார்

 புதுடில்லி, ஜன.1, அய்.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் அறிவியலாளர்கள் பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு அளிக்கப் பட வேண்டிய இடஒதுக்கீடு அளிக் கப்படவில்லை என்று ஊழியர் நல சங்கம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் நலச்சங்கம் சார் பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஜகதீஷ் கூறுகையில், சி,டி, ஆகிய பிரிவுகளில் அறிவியலாளர்களை நேரடியாக நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு முறை பொருந்தாது. பிரிவு பி முதல் எச் வரையிலான அறிவியலாளர்கள் நியமனத்தின்போது தான் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்று கூறியுள்ளார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி கூறிய தாவது:

அய்சிஎம்ஆர். நிறுவனம் சார்பில் 5.12.2020 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படி, புனேவில் உள்ள தேசிய வைராலாஜி  நிறுவனம், தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அய்சிஎம்ஆர் தலைமையகம் ஆகியவற்றில் பிரிவு டி மற்றும் பிரிவு பிரிவுகளில் அறிவியலாளர்கள் பணிக்கு 65 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பணி நியமனம் பெறுவோருக்கு பிரிவு டி அறிவியலாளர்களுக்கு ரூ.78,800 முதல் ரூ.2,09,200 (முன்னதாக ரூ.7,600 ஆக இருந்து திருத்தப்பட்டது) மற்றும் பிரிவில் ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 (முன்னதாக ரூ.8,700 ஆக இருந்து திருத்தப்பட்டது). இந்த விளம்பரத்தில் இடஒதுக்கீடு பிரிவு குறித்து குறிப்பிடப்படவே இல்லை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்ச கத் தின்கீழ் செயல்பட்டுவரும் அய்.சி.எம்.ஆர். நிறுவனம் அனைத்து வித நேரடி பணிநியமனங்களின்போது இடஒதுக்கீடு கொள்கையை நடை முறைப்படுத்த வேண்டியது அரச மைப்பின்படி கட்டாயமாகும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (டிஎஸ்டி), எய்ம்ஸ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(பிஜிஅய்எம்ஆர்) ஆகியவற்றிய்ல பிரிவு எச் வகையிலான உயர்பிரிவு அறிவியலா ளர்கள், பேராசிரியர்கள்வ¬யிலான பணிநியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட வேண்டும்.

ஏற்கெனவே, அகில இந்திய ஒதுக் கீட்டுக்கான இடங்களை மாநிலங்கள் அளித்துள்ள நிலையில், பிற்படுத் தப்பட்டவர்களுக்கு இடஒதுக் கீட்டை சுகாதாரத்துறையின் இயக் குநர் மறுத்துவருகிறார். அதே சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மற்றொரு நிறுவனமும் இடஒதுக்கீட்டை மறுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1,500 என்று உள்ள நிலையில், உயர் ஜாதி யில் பொருளாதாரத்தில் நலிந்தோர் பிரிவுக்கு விண்ணப்பக்கட்டணமே இல்லை என்று இருப்பதுகுறித்த புகாருக்கு அய்.சி.எம்.ஆர். நிறுவனத் தின் உதவி இயக்குநர் ஜகதீஷ்  கூறு கையில் பிற்ப டுத்தப்பட்டவர்களுக்கு கட்ட ணத்திலிருந்து விலக்கு அளிப்ப தில்லை என்று கூறியுள்ளார்.

Comments