செய்தியும், சிந்தனையும்....!

பாதிக் கிணறைத் தாண்டி என்ன பயன்?

வேளாண் சட்டங்களை 18 மாதம் நிறுத்தி வைக்கத் தயார்! - மத்திய அரசு உறுதி

அதில் என்ன பாதிக் கிணறு தாண்டுவது? ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பார்களே, அதுதான் இதுவோ!

கடும்

தூக்கமோ!

மு..ஸ்டாலின் கொல்லைப்புற வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். - எடப்பாடி பழனிசாமி

ஏன் இவர்கள் எல்லாம் விழித்துக் கொண்டிருக்கவில்லையோ!

புத்தி கொள்முதல்

அதிபர் தேர்தலில் தோல்வி கண்ட டொனால்ட் டிரம்ப் புதிய கட்சியைத் தொடங்குகிறார்.

புதிதாகப் புத்தி கொள்முதல் வாங்கினால் சரி.

குதிரைக்கு முன்னால் வண்டியா?

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்: - ஜக்கி வாசுதேவ்

குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டும் கதைதான் - தேவை முன்யோசனை!

ஆனால் இவருக்கு மன்னிப்பு!

ஆட்சியிலிருந்து வெளியேறு முன்னர் 73 குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினார்.

ஆனால், டிரம்புக்கு மக்கள் மன்னிப்பு வழங்கவில்லையே!

ராமராஜ்ஜியத்தில்...

உத்தரப்பிரதேசத்தில் லஞ்ச வழக்கில் சி.பி.அய். அதிகாரிகள் கைது.

, வேலியே பயிரை மேய்கிறதோ - .பி. பா... ஆட்சியில் நடப்பது ராமராஜ்ஜியம்தானே!

Comments