டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· அடுத்த 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைத்து, அரசு மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்த குழுவை நியமித்து முடிவெடுக்க தயார் என மத்திய அரசு
விவசாய அமைப்புகளிடம் தெரிவித்துள்ளது.
· இது
அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள் என்று அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் பதவியேற்ற
பின்பான தன் முதல் உரையில் தெரிவித்தார். பல சோதனைகளை சந்தித்துள்ள
அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம் என்று அவர் கூறினார்.
· மோடி ஆட்சியில் கல்வித் துறையில் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 2018இல் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பணியில் இருந்தனர். தற்போது 90 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என இந்திய பொருளாதார
கண்காணிப்பு மய்யம் அறிக்கை அளித்துள்ளது.
டெக்கான்
கிரானிகல், சென்னை:
· அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கும் முதல் பெண் மணி, இந்தியவம்சாவளிப் பெண் மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார். விழாவில் கருப்பினத்தைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு தயாரித்த உடையை அணிந்திருந்தார்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· நாட்டின் ராணுவ ரகசியத்தை வெளியிடுவது தேச துரோகம். இது குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவோம் என ரிபப்ளிக் தொலைக்காட்சி
செயல் இயக்குனர் அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாய அமைப்புகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கருநாடாக மைசூரில் இருந்து விவசாயிகள் டில்லிக்குப் புறப்பட்டு சென்றனர்.
பிபிசி
நியூஸ் தமிழ்:
· அமெரிக்க
அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல்
நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார். பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேருவது தொடர்பாகவும், அமெரிக்க மக்கள் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பாகவும் அவர் உத்தரவுகளைப் பிறப்பித்தார். இவையே அவரது முதல் உத்தரவுகளில் முக்கியமானவை.
· டொனால்டு
டிரம்ப் புறக்கணிப்பு: வழக்கமாக புதிய அதிபரை முன் வாசல் வழியாக பதவியை இழக்கும் அதிபர் வரவேற்பார். ஆனால், இந்நிகழ்வில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.1869க்கு பின் தமக்கு பின் பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் அதிபர் டிரம்ப் ஆவார்.
- குடந்தை
கருணா
21.1.2021