மறைவு

கும்பகோணம் கழக மாவட்டம் திருநாகேஸ்வரம், பிளாஞ்சேரி மானமிகு என்.அரிய புத்திரன் (வயது 75). இன்று 02-01-2021 அதிகாலை 2.00 மணியளவில் உடல்நலக்குறைவால் மறைவுவுற்றார்.அவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்தவர்.பணிபுரியும் காலத்தில் திராவிடர் தொழிலாளர் சங்க பொருளாளராக திறம்பட செயல்பட்டவர். பணி நிறைவுக்கு பிறகு இயக்கப் பணிகளில்  ஈடுபட்டு வந்தார்அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்  என்பதை ஆழ்ந்த வருத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Comments