முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கண்ணுகுடி சா.தண்டாயுதபாணிக்கு நமது வீரவணக்கம்!

ஒரத்தநாடு வட்டத்தில் நீண்ட காலம் இயக்கப் பணியும், தொண்டும் ஆற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் கண்ணுகுடி சா.தண்டாயுதபாணி அவர்கள் தனது 79 ஆவது வயதில் நேற்று (26.1.2021) இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

இயக்கம் அறிவிக்கும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். நம்மிடம் மிகவும் அன்புடன் பழகிய பெருமகனார். அவரது இழப்பால் வருந்தும் அவரது வாழ்விணையர் திருமதி வள்ளியம்மை அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

26.1.2021

குறிப்பு: தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

 

Comments