மக்களைத் துண்டாடுவதே பா.ஜ.க.வின் அரசியல்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடல்

ஜெய்ப்பூர், ஜன.6- மக்களைத் துண்டாடுவதே பாஜகவின் அரசியல் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார். “இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரைத் தியாகம் செய்து, காங்கிரஸ் இந்த நாட்டை 70 ஆண்டுகளாக ஒன் றாக வைத்துஇருந்தது. பாஜக அப்படி அல்ல. அவர்களுக்கு நாட்டை அழிக்க வேண்டும் என் பதே விருப்பம். இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கவே அவர்கள் பணியாற்றுகிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

Comments