அரை டவுசர் அணிந்து நாக்பூரில் இருந்து பேசுவது தேசியவாதம் அல்ல ஆர்.எஸ்.எஸ்.மீது சச்சின் பைலட் தாக்கு

ஜெய்ப்பூர்,ஜன.5- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சச்சின் பைலட் பேசியபோது, ஆர்எஸ்எஸ் அமைப் பின் பெயரைக் குறிப்பிடாமல் அந்த அமைப்பை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

விவசாயிகளின் நலனைப் பற்றி நீங்கள் பேசினால், அதுதான் உண்மையான தேசியவாதம். அரை டவுசர் அணிந்து கொண்டு நாக் பூரில் இருந்து உண்மைக்கு மாறாக பேசுவது தேசியவாதம் அல்ல.

இந்த நேரத்தில் நீங்கள் (பாஜக) லவ்-ஜிஹாத் பற்றி பேசுகிறீர்கள். திருமணங்கள் குறித்து சட்டங்களை உருவாக்குகிறீர்கள். விவசாயிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளு கிறீர்கள். இந்த நாட்டில் பெரும் பாலான விவசாய சங்க தலைவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள். பாஜகவைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் யாரும் இல்லை.

வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவர்களும் பயப் படுகிறார்கள். அவர்கள் தங்கள் எதிர்காலம், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நினைத்து பயப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசால் தீர்க்க முடியாத அளவிற்கு இது ஒரு சிக்கலான பிரச்சினை அல்ல. இந்தச் சட் டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான விதியை சேர்க் கிறோம், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்று மட்டுமே நீங்கள் கூறவேண்டும். ஒரு சில சட்டங்களை திரும்பப் பெற்றால், அதில் எந்த இழப்பும் இல்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். சட்டங்களைத் திரும்பப் பெற்றால் நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம். ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால் சட் டங்களை ரத்து செய்யாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments