தமிழ்நாடு கிராம வங்கியுடன் காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம்

சேலம்,ஜன. 1- இந்தியாவின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஅய் ஜெனரல் இன்சூ ரன்ஸ் முன்னணி பிராந்திய கிராமப்புற வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு கிராம வங்கியுடன் எஸ்பிஅய் ஜென ரல் இன்சூரன்ஸ் நிறுவனத் தின் சில்லறை தயரிப்புகளை அதன் விரிவான நெட்வொர்க் மூலம் .தமிழ்நாடு முழுவதும் விநியோகத்திற்காக- கார்ப்ப ரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த தருணத்தில் பேசிய இந்திய ஸ்டேட் வங்கியின் மேலாண் இயக்குநர் பி.சி. காண்ட்பால்: பிராந்தியத்தில் எங்கள் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விநியோகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் பயணத்தில் தமிழக கிராம வங்கியுடனான எங் கள் கூட்டணி ஒரு முக்கிய மான மைல்கல்லாகும். சமூகத் தின் அனைத்துப் பிரிவுகளி லும் உள்ள வாடிக்கையாளர் களுக்கு எங்கள் தயாரிப்பு களை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்வதற்கான  எங்கள் நிலையான முயற்சி ஆகும். இந்த கூட்டணி மூலம் தமிழ்நாட்டில்  காப்பீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று நங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக கிராம வங்கியின் தலைவர் எஸ். செல்வராஜ் கூறுகையில்: “எஸ்பிஅய் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒப்பந்தம் எங்கள் வாடிக் கையாளர்களுக்கான அதிகளவிலான நிதி சேவை வாங்கல்களை விரிவாக்க உதவும். எங்கள் வாடிக்கையா ளர்களுக்கு மதிப்பு கூட்டப் பட்ட தயாரிப்புகளை வழங் குவதற்கான வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Comments