கரோனா காலத்திலும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு

புதுடில்லி, ஜன.26 கரோனா பொது முடக்க காலத்திலும் இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு மட்டும் 35 சதவிகிதம் அதிகரித்திருப்ப தாக, ‘ஆக்ஸ்பாம்எனும் லாப நோக் கற்ற அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேகாலத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.7 லட்சம் பேர் வேலையிழந்து வறுமையின் கொடுமையில் தள்ளப்பட்டனர் என்றும் குறிப்பிட் டுள்ளது. கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச்சமத்துவமில்லா வைரஸ்என்ற பெயரில் சுவிட்சர் லாந்தில் வெளியிடப்படுள்ள இந்த அறிக்கையில், “கரோனா பொதுமுடக் கக் காலத்தில் இந்தியாவில் பெண்கள், விளிம்புநிலைச் சமுதாய மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் தொற்று இந்தியா வின் பெரும் செல்வந்தர்களுக்கும் அதன் கோடிக்கணக்கான திறமையற்ற தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது.

கோடிக்கணக்கானோரின் வேலை யைப் பறித்து, வறுமையிலும் பட்டி னியிலும் தள்ளியுள்ளது. கல்வி, நல வாழ்வு, சிறந்த வாழ்க்கைஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏப்ரல் 2020-இல் மட்டும், பொதுமுடக்கத்தின் போது, இந்தியப் பணக்காரர்களின் செல்வம் 35 சதவிகிதம் அதிகரித்துள் ளது.

அதேநேரத்தில் 84 சதவிகித குடும் பங்கள் பல்வேறுவகையான வருமான இழப்புகளை சந்தித்து உள்ளன. ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1.7 லட்சம்பேர் வேலை இழந்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.மார்ச் 18 முதல் டிசம் பர் 31 வரையான காலத்தில் உலகின் பெரும் பணக்காரர்களின்சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், முதல் 10 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 39 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் கூறியிருக்கும் ஆக்ஸ்பாம், இந்தியாவில் சமத்துவமின் மையைக் குறைக்க, குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தி, முறையான இடைவெளியில் அதனை அதிகரிக்க வேண்டும்; 50 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 2 சதவிகித கூடுதல் வரி விதிக்கலாம் என்று ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

Comments