உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை நாளைக்குள் ஆளுநர் முடிவு

மதுரை, ஜன. 28- பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக ஆளு நர் நாளைக்குள் முடிவெடுப்பார் என தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ் வரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ள மகன் ரவிச்சந் திரனுக்கு நீண்ட கால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது.

அரசு வழக்குரைஞர் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘தன்னை விடுவி க்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பேரறி வாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 29ஆம் தேதிக்குள் (நாளை) முடிவெடுப்பார். அவரது முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டி யுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். வழக்குரைஞர் திருமுருகன் ஆஜராகி, ‘‘அதுவரை பரோல் வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை பிப்.5க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டமன்ற தேர்தலின்போது நோயாளிகளுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் அளிக்கப்படும்

சென்னை, ஜன. 28- தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 17 மாவட்டங்களில் நியமிக் கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று சென்னை, அடையாரில் உள்ள அண்ணா பயிற்சி மேலாண்மை நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு மற்றும் தமி ழக தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் இவர்களுக்கு பயிற்சி அளித் தனர். இந்த பயிற்சி முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. மற்ற மாவட்ட அதிகாரிகளுக்கு திருச்சியில் விரைவில் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”சட்டமன்ற  தேர்தலின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் முடியும்  நேரத்தில் ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு உரிய பாதுகாப்பு  வழி முறைகளுடன் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு  திரை பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

Comments