தமிழர்களின் உணர்வுகளை, மொழியை மத்திய அரசு நசுக்க எண்ணுகிறது

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மதுரை,ஜன.16- தமிழ் மக்க ளின் உணர்வுகளை, மொழியை மத்திய அரசு நசுக்க எண்ணு கிறது. ஆனால் இவற்றை யாராலும் நசுக்க முடியாது எனஅகில இந்திய காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மதுரை விமான நிலை யத்தில் அவர் செய்தியாளர் களிடம் கூறியது: நான் ஜல் லிக்கட்டை நேரடியாகப் பார்த்தேன். தமிழ் மக்கள்ஏன் ஜல்லிக்கட்டை ஊக்குவிக் கின்றனர் என்பதை நேரி பார்த்து அறிந்து கொண் டேன். ஜல்லிக்கட்டு விளை யாட்டு காளைகளைத் துன் புறுத்துவது என சிலர் சொல் லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இன்று நேரடியாக ஜல்லிக்கட்டைப் பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். அதற்கான வாய்ப்பே இல்லை.

நான் இங்கு வந்ததற்கான மற்றொரு காரணம், நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதுபோல் தெரி கிறது. தமிழ் மக்களின் உணர் வுகளை, மொழியை நசுக்கு வதன் மூலம் தமிழ் உணர்வை நசுக்கிவிடலாம் என எண் ணுகிறது.

தமிழ் உணர்வை யாரா லும் நசுக்க இயலாது. இரண் டாவது, தமிழுணர்வை நசுக்குவது நமதுநாட்டுக்குச் செய்யும் மிக மோசமான செயலாகும். பல கலாச்சா ரங்கள் நமது நாட்டில் உள் ளன.அவை நமது தேசத்தின் உயிர்போன்றவை. குறிப் பிட்ட சித்தாந்தம், குறிப் பிட்ட ஒரு மொழி என்பது இல்லை. பல மொழிகள் கலாச்சாரங்கள் நமது நாட் டில் இருக்கின்றன. தமிழ் மக்களுக்கு நன்றிசொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்களிடமிருந்து பல விஷ யங்களை கற்றுக்கொண் டேன்.

கடந்த காலம் குறித்தும் அவர்கள் கற்றுக் கொடுத் துள்ளனர். அதோடு எதை நோக்கி நாடு நகர வேண்டு மென்ற திசையையும் காட்டி யுள்ளனர். ஆகவே, அவர் களுக்கும், ஜல்லிக்கட்டில் பங் கேற்கும் இளைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்து களையும் கூறிக்கொள்கிறேன்.

மத்திய அரசு விவசாயிகளை புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது. விவசாயிகளின் நலத்தைப் பார்க்காமல் அரசு ஒருசில நண்பர்களின் நலனுக்காக மாற்ற நினைக்கிறது.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. யாராவது விவசாயிகளை நசுக்கி, வளம் பெறலாம் என எண்ணினால், அவர்கள் நமது வரலாற்றைப் பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் விவசாயிகள் பலவீனமா கிறார்களோ அப்போதெல் லாம் நாடும் பலவீனமடைந் துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Comments