விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய பா.ஜ.க. தலைவர் வீட்டுவாசலில் மாட்டுச் சாணத்தை குவித்த போராட்டக்காரர்கள்

சண்டிகர், ஜன. 3 விவசாயிகள் போராட் டத்தை இழிவுபடுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு வாசல் முன்பு  மாட்டு சாணம் கொட்டப்பட் டுள்ள சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட் டங்களை எதிர்த்து தலைநகர் டில்லி எல்லையில் பல்லாயிரக்கணக்கில் விவ சாயிகள் கடும் குளிரையும் பொருட் படுத்தாது போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 39 ஆவது நாளாக தொடர்கிறது. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட பேச்சுவார்த்தை யிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப் படாத நிலையில், வரும் 4 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படா விட்டால், போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருப்பதுடன்,  வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத் தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், திக்சன் சூட், விவசாயிகள் டில்லிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக விமர்சித்தார். இது விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து,  திக்சன் சூட் பேச்சுக்குக்  கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஹோசியான்பூரில் உள்ள அவர் வீட்டு வாசலில் மாட்டு சாணத்தை விவசாயிகள் கொட்டி யுள்ளனர். இச்சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments