"மயக்க பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை நூல்களை வழங்கி தமிழகம் முழுவதும் கழகத் தோழர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

வெள்ளலூர்
"மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் கழகத்தின்  சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் வெள்ளலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் 24.12.2020 அன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது!

கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ளலூர் .பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் காளிமுத்து, மதுக்கரை ஒன்றிய செய லாளர் பொன்ராஜ், மண்டல மாணவர் கழக செய லாளர் மு.ராகுல், நகர தலைவர் கழக ஆறுச்சாமி, நகர அமைப்பாளர் கழக சுந்தராஜ், கழக ஆனந்த், கழக வெங்கிடு, ஆறுமுகம் ஆகியோர் காலந்து கொண்டனர்.

செந்துறை

செந்துறையில் டிசம்பர் 24இல் தந்தை பெரியார் நினைவு நாளில் அமைதி ஊர்வலம் சென்றுமாலை அணிவித்து "மயக்க பிஸ்கெட்"கள் - ஓர் அறிக்கை நூல் வினியோகிக்கப் பட்டன.

திருப்பூர்

தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு நாளை யொட்டி திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் "மயக்க பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை! என்ற கழக நூல் வெளியீட்டு பிரச்சாரம் திருப்பூர் மாவட்ட கழக தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை யில் திருப்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரிலுள்ள தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்திலிருந்து துவங்கி நடைபெற்றது.

நிகழ்வில் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, அமைப்பாளர் வீ.சிவசாமி, மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன், துணைத் தலைவர் "ஆட்டோ" தங்கவேல், செயலாளர் பா.மா.கருணாகரன், கழகத் தோழர் குணசேகர் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் கழக நூலை பெருவாரியாக விநியோகித்தனர்.

நாகை

நாகை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய "மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை என்ற நூலை வேளாங்கண்ணி கடைவீதியில் திராவிடர் கழக திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் சு.ராஜ்மோகன்  தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் , நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன்,  நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா,  மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் மு.குட்டி மணி,  மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.தீபன்  சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் தொடங்கி வைத்தார். .ஆதி, மு.இளமாறன், மா.இளமாறன், இல.மணிகன்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

சாலியமங்கலம்

"மயக்க பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 22.12.2020 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், சாலியமங்கலத்தில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளை ஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜ வேல் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங் நிகழ்வை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயக்குமார், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் கி. ஜவகர், ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், ஒன்றிய துணை தலைவர் உத்திராபதி, ஒன்றிய துணைச் செயலாளர் வை.இராஜேந்திரன், ஒன்றிய அமைப் பாளர் செண்பகபுரம் தமிழ்செல்வன், சாலியமங்க லம் நகரத்தலைவர் துரை. அண்ணாத்துரை, பெரியார்நகர் .உத்திராபதி, சாலியமங்கலம் முரு கேசன்ஆகியோர் முன்னிலையேற்று பங்கேற்றனர். பொதுமக்களிடையே "மயக்கக பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் வழங்கியது விழிப் புணர்வை ஏற்படுத்தியது.

Comments