இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல அலுவலகம் இரண்டாக பிரிப்பு

சென்னை, ஜன. 26- தமிழக அரசின் இந்து சமய அறநிலை யத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை மண்டல இணை ஆணையர் அலுவல கம் சென்னை-1, சென்னை-2 என இரண்டாக பிரிக்கப்பட் டுள்ளது. அதன்படி சென்னை மண்டல இணை ஆணையர்-1 அலுவலகக் கட்டுப்பாட்டில் திருவொற்றியூர், தண்டை யார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், அய னாவரம் ஆகிய வருவாய் வட் டங்களில் உள்ளகோயில்க ளும், சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவ லகக் கட்டுப்பாட்டில் மயி லாப்பூர், அமைந்தகரை, மதுர வாயல், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வருவாய் வட்டங்களில் உள்ள கோயில்களும் வரும்.

சென்னை மண்டல இணை ஆணையர் அலுவல கம் இதுவரை ஆணையர் அலுவலக வளாகத்தின் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது இடப் பற்றாக்குறை காரணமாக இந்த 2 அலுவலகங்களையும் புதிய இடத்துக்கு மாற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 இணை ஆணையர் மண் டலஅலுவலகங்களுக்கும் தனித்தனியே புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டல இணை ஆணையர்-1 அலுவலகம் பாடி, யாதவாள் தெருவில் உள்ள வாடகைக் கட்டிடத் தில் செயல்படும். சென்னை மண்டல உதவி ஆணையர் அலுவலகமும் இங்குசெயல் படும்.

சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலகம் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான பிள்ளையார் கோயில் தோட் டம் வணிக வளாகக் கட்டி டத்தில் செயல்படும். இந்த அலுவலகங்கள் வரும் 25ஆம் தேதியியிருந்து புதிய இடங் களில் செயல்படும். மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

Comments