அரசு மருத்துவக்கல்லூரிக்கட்டணத்தையே சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியிலும் நிர்ணயிக்க வேண்டும்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 48 நாள்களாக போராட்டம்

 சிதம்பரம், ஜன. 26- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன், சட்டமன்ற உறுப் பினர் மற்றும் துணைவேந்தர் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.

அரசு மருத்துவ கல்லூரியாக அறி விக்கப்பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், தனியார் கல்லூ ரிகளை விட, கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அரசு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி, மாணவ - மாண வியர், போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 21ஆம் தேதி, கல்லூரி நிர்வா கம் காலவரையற்ற விடுமுறை அளித்து, மாணவர் விடுதிகளை மூடியதுடன், உணவு, தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது.

இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நேற்று, 48ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. துணைவேந்தர் முரு கேசன், சிதம்பரம் சட்டமன்ற உறுப் பினர் பாண்டியன் ஆகியோர், மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். இதில், எந்த உடன்பாடும் எட்டவில்லை.இதனால், போராட்டம் தொடர்ந்தது. "மாணவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றா விட்டால், தமிழகம் முழு தும் அரசு மருத்துவர்கள் சங்கம் போராட் டம் நடத்தும்" என, அதன் மாநில செயலாளர் சுவாமிநாதன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments