கல்வி உரிமைக்கான பரப்புரைப் பயணம்

கன்னியாகுமரி, ஜன.30- கல்வியே நம் ஆயுதம் எனும் முழக்கத் துடன் கல்வி உரிமைக்கான பரப் புரை பயணம்  எனும் தலைப்பில் கன்னியாகுமரியில் இன்று (30.1.2021) தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரை நடைபெறு கிறது. அக்குழுவின் பரப்புரைப் பயணம் 15.2.2021 அன்று சென்னை பெரியார் திடலை அடைகிறது.

'நீட்' தேர்வுக்கு இரையான அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் ஒருங்கிணைப்பில் பரப்புரை பயணம் நடைபெறு கிறது. பரப்புரைப்பயணத்தின் முடிவில் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக் கைகள் வழங்கப்பட உள்ளன. அம்பேத்கர் மணிமண்டபம், அண்ணா, கலைஞர் நினைவி டங்களை அடைந்தபின்னர் குழு வின் பயணம் 15.2.2021இல் பெரியார் திடலில் நிறைவு பெறு கிறது.

Comments