விருதுநகரில் தந்தை பெரியார் நினைவுநாள் இலவச மருத்துவ முகாம்
விருதுநகர், ஜன. 1- அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் நினை வுநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் சார்பில், ராஜா குழந்தைகள் மற்றும் பொதுநல மருத்துவமனை, ஜேஜே கிளினிக் கல் லேபரட்டரியுடன் இணைந்து இலவச மருத்துவமுகாம், விருது நகர் ஒன்றியம், புல்லலக்கோட்டை ஊராட்சி -சேவை மய்யத்தில், 20.12.2020 ஞாயிறு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற்றது. மாவட்ட கழக செயலா ளர் விடுதலை தி.ஆதவன் தலைமை யில், மாவட்ட .. தலைவர் பெ.. சண்முகசுந்தரம் முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினர் வெ.புக ழேந்தி அனைவரையும் வரவேற்றார்.

விருதுநகர் சி.பி.அய். நகரச் செயலாளர் கே.எஸ்.காதர்மைதீன் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். புல்லலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மா.மங்களேஷ்வரி மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார். சி.பி.அய். சார்பில் மருத்துவர்கள் பி.எஸ்.ஆர்.ஜெகன், எழில்ஜெகன், ஜே.ஜே.லேபரட்டரி நந்தகுமார் மற்றும் செவிலியர்க ளுக்கு பயனாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. மாநில .. துணைத்தலைவர் கா.நல்லதம்பி, புல்லலக்கோட்டை மாரியப்பன், முரளிகிருஷ்ணன், .அழகர் ஆகி யோர் முகாமினை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். விருதுநகர் .. தோழர் .சண்முகம், மாவட்ட .. செயலாளர் சு.பாண்டி, துணை அமைப்பாளர் மா.பாரத்,  மாவட்ட கழக அமைப்பாளர் வெ.முரளி, அருப்புக்கோட்டை நகர கழக தலைவர் சு.செல்வராசு, செயலா ளர் பா.இராசேந்திரன், இளைஞர ணித் தலைவர் .திருவள்ளுவர், விருதுநகர் மாணிக்கராஜ், ராஜேஷ், ஜெயக்குமார், மல்லாங்கிணறு கழக அமைப்பாளர் ஆதிமூலம் மற்றும் தோழர்கள் முகாமில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மயக்க பிஸ்கெட்டுகள்: ஓர் எச்சரிக்கை" புத்தகம் வழங்கல்

முகாமில் பங்கேற்ற அனைவ ருக்கும் "மயக்க பிஸ்கெட்டுகள்: ஓர் எச்சரிக்கை" நூல் மற்றும் இயக்க வெளியீடுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் பெரியவர்களென 110 நபர்கள் முகாமில் பங்கேற்று பயன டைந்தனர்.

Comments