நம்புங்கள் - ஹிந்து மதம் அனைத்து மதங்களையும் ஏற்கிறதாம்! - கூறுகிறார் குருமூர்த்தி

கேள்வி: பல மொழிகளுக்கும், பல மதங்களுக்கும் பொதுவான மகாத்மா காந்தியை ஹிந்து மதத்திற்கு மட்டுமே உரித்தாக்குகிறதா ஆர்.எஸ்.எஸ்.?

பதில்: ஹிந்து மதம் அனைத்து மதங்களையும் ஏற்ப தால், அது அனைத்து மதங்களுக்கும் பொதுவான மதம்.அதனால்தான் அனைத்து மதங்களுக்கும் பொதுவான வரானார் காந்தி.

- 'துக்ளக்' 20.1.2021 -  பக்கம் 13

ஆமாம், அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபை திட்டமிட்டுக் காந்தியாரை தீர்த்துக் கட்டின.

அதுவும் ஹிந்து மதத்தின் அய்ந்தாவது வேதம் என்று பீற்றிக் கொள்ளும் - கீதையிலிருந்தே சுலோகங்களைச் சொல்லி காந்தியார்மீதான கொலையை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனர் ஆர்.எஸ்.எஸ். தொட்டிலில் வளர்ந்த பேர் வழி!

அனைத்து மதங்களையும் ஹிந்து மதம் ஏற்பதால்தான் 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள்கூடி அடித்து நொறுக்கி ஆனந்த நிர்வாணக் கூத்தாடினர்.

நம்புங்கள் - ஹிந்து மதம் அனைத்து மதங்களையும் ஏற்கிறது. குருமூர்த்திகள் இப்படியே எழுதிக் கொண்டு போனால்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் முகத்திரையைக் கிழித்து இளைஞர்களுக்கு உணர் வூட்டவும் முடியும் - சரியா?

Comments