கரோனா வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட தம்பதி

லண்டன், ஜன. 26- கரோனா வைரஸ் பாதிப்பு பலரது வாழ்க் கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த கரோனா ஊரடங்கில் அதி களவில் திருமணங்கள் நடந்தன. விமர்சகர்களின் குறுஞ்செய்திக ளுக்கு கடும் பொருளாக அமைந் தன. இந்த நிலையில், கரோனா பாதிப்பிற்கு ஆளான இங்கிலாந் தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எலிச பெத் கெர் மற்றும் சைமன் பிரை யன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா வைரஸ் பாதிப் பால் இந்த திருமணம் நடைபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள் ளது. இருவரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளானதோடு மிக வும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இருவரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சைமன் பிரையனின் நிலைமை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளார். எனினும், எந்த பிரச் சினையும் அவர்களின் திரும ணத்தை தடுக்க முடியவில்லை.

ஜூன் மாதத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததாக எலிசபெத் மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை மோசமடைந்து வந்த தால் மருத்துவமனையில் திரும ணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளனர். இது ஒன்று மட்டுமே அவர்களுக்கான வாய்ப் பாக இருந்துள்ளது. மருத்துவ மனை ஊழியர்கள் எங்களுக்கு திரு மணத்தை நடத்தி வைப்பதற்கான உரிமத்தைப் பெற விரைந்து செயல் பட்ட போது சைமனின் நிலைமை மிகவும் மோசமானதாகவும், சைமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் கண்ணீருடன் கூறி எலிசபெத் நினைவு கூர்ந்தார்.

எலிசபெத் தொடர்ந்து பேசும் போது, "மருத்துவர்கள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடி யாது என்று என்னிடம் கூறினார் கள். ஏனெனில், சைமன் சிகிச்சைக் காக அவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், அவர்கள் சிகிச்சையை ஒருமணிநேரம் நிறுத்தி வைத்தனர். நாங்கள் அந்த தருணத்தில் இணைந்து திருமணம் செய்து கொண்டோம். எங்களின் முதல் முத்தத்திற்கு நாங்கள் சில நாள்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது.” என்று தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இறப்பு விகிதம் 80 விழுக்காடாக இருப்பதால் மகிழ்ச்சியான முடிவு இது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இருவரும் ஆக்சிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. "ஒவ்வொரு முறையும் மூச்சு விடுவதற்கு சிரமப் படும் திகிலூட்டும் அனுபவம், நாம் விரும்பும் மனிதர்கள் எவ்வ ளவு முக்கியம் என்பதை உணர்த் தியது. நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் இருந்திருந்தால், திரு மணம்  செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தி ருந்தால், நாங்கள் இப்போது இங்கே இருந்திருப்போம் என்று நான் நினைக்கவில்லைஎன எலி சபெத் கூறியுள்ளார்.

சைமன் மற்றும் எலிசபெத் தம் பதிகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றனர். எனினும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கெனான் ஒரு சாட்சியாக நின்று இந்த திரு மணத்தை நடத்தி வைத்துள்ளார். ``குழுவுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி முடித்தோம். அவர்கள் ஆரம்பத் தில் விரும்பிய திருமணத்தை எங் களால் கொடுக்க முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு மறக்க முடி யாத குறிப்பிடத்தக்க திருமணத்தை நடத்தியுள்ளோம்என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments