புரட்சிப் பொங்கலே, வா!

பொங்கலே, வா!

புதையுண்ட

திராவிடத்தை

புதுக்கிடவே

பொங்குக! பொங்குகவே!

 

சிந்து சமவெளியே

சிலிர்த்தெழு!

கீழடி வேரே

கிளர்ந்தெழு!

 

ஆதிச்ச நல்லூரே

அவசரமாய் வா!

ஆரியப்படை கடக்க

அக்னியைக் கொண்டுவா!

 

திராவிடம் வெல்லும்!”

காலத்தின் பசி தீர்க்க

காலத்தால் தீட்டப்பட்ட

திராவிடத் தலைவர்

வீரமணி தந்திட்ட

புது()ப் பாட்டு இது!

 

நாவெல்லாம் பேசட்டும்

நாடெல்லாம் கேட்கட்டும்!

காற்றெல்லாம் வீசட்டும்

காதல் மொழியு மாகட்டும்!

 

நொறுங்கட்டும்

நொறுங்கட்டும்

கைபர்களின்

பண்பாட்டுப்

படையெடுப்பு!

முழங்கட்டும்

முழங்கட்டும்

பூகம்பப் பெரியாரின்

கை காட்டும்

புதுப்பாட்டைப்

புதுப்பாட்டு!

 

பொங்கலே வா!

புரட்சிச்

சங்கநாதம் பாடி

புதையுண்ட

திராவிடத்தை மீட்போம்

 

பொங்கலே வா, வா!

பொங்கலோ

பொங்கல்!

கவிஞர் கலி.பூங்குன்றன்

Comments