கடவூர் மணிமாறன் துணைவியார் ரெத்தினம் அம்மாள் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்து வரும் 'விடுதலை' வாசகர் வட்ட செயலாளர்   தோழர் கடவூர் மணிமாறன் அவர்களது வாழ்விணையர் திருமதி ரெத்தினம் அம்மாள் (70) நேற்று (28.1.2021) மாலை இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.

தோழர் கடவூர் மணிமாறன் திராவிடர் இயக்கத் தீவிரப் பற்றாளர். தமிழ் இலக்கியம் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ள பகுத்தறிவு எழுத் தாளர். திராவிடர் கழகம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

அவருக்கும், குடும்பத்தினருக்கும், நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை

29-1-2021

குறிப்பு: செய்தி அறிந்தவுடன் கரூர் மாவட்ட கழகத் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

 

Comments