அமெரிக்க இராணுவத்தில் பாகுபாடுகள் களையப்பட்டது

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு டிரம்ப் விதித்த தடையுத்தரவை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், ஜன. 26- அமெரிக்க இராணு வத்தில் மூன்றாம் பாலி னத்தவர்கள் பணியாற்ற டிரம்ப் ஆட்சிக் காலத் தில் விதிக்கப்பட்டி ருந்த தடையை புதிய அதிபர் ஜோ பைடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற் கான உத்தரவில் நேற்று  (ஜன.25) அதிபர் பைடன் கையொப்பமிட் டார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற முதல் ஆண்டில், அந் நாட்டு இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், திருநங்கையர் கள் பணியாற்றத் தடை விதித்து உத்தர விட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன், பல்வேறு புதிய உத்தரவுகளையும், டிரம்ப் பிறப்பித்த பல்வேறு உத்தர வுகளையும் ரத்து செய்து அறிவித்து வருகிறார்.

பதவி ஏற்ற சில மணிநேரங்களில் 15 உத்தரவுகளுக்கு மேல் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு உத்தரவிட்டார். இந்நிலையில்  அமெரிக்க இராணுவத்தில் மூன் றாம் பாலினத்தவர் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை அதிபர் பைடன் நேற்று நீக்கினார்.

இதுதொடர்பாக ஓவல் அலுவ லகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஜஸ்டினுடன், அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் குப்பின், டிரம்ப் ஆட்சியின்போது விதிக்கப்பட்டிருந்த இராணுவத் தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தார்.

இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவில், “அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். உலகள வில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு. அதில் இராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை.

இராணுவத்தின் நலனுக்காக வும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதி வாய்ந்த அனைத்து அமெ ரிக்கா மக்களும் ராணுவத்தில் பணி யாற்றலாம். பாலினத்தின் அடிப் படையில் இராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்த 60 நாட்களில் என்னென்ன மாற்றங்கள், நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு குறித்து பாது காப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் கூறுகையில்அடுத்த 2 மாதங்களில் அதிபர் பைடன் பிறப்பித்த உத் தரவை அமல்படுத்துவோம். அதி பரின் உத்தரவுக்கு நான் முழுமை யாக ஆதரவு அளிக்கிறேன். மூன் றாம் பாலினத்தவர்கள் யார் வேண்டுமானாலும் விருப்பம் இருந்தால் இனிமேல் இராணு வத்தில் பணி யாற்றலாம். எந்தவித மான பாலினப் பாகுபாடும் இருக் காது. இது போன்ற சரியான செயல்களைச் செய்ய சரியான நேரம்எனத் தெரிவித்தார்.

Comments