'சக்ரவியூகத்தின்' சக்கரம் கழன்றது!

 

தலைமை நீதிபதி முதல் அய்..எஸ்.கள் வரை சக்ரவியூகம்! மாற்றம் செய்த நாள் டிச.13 2020 - 10.17.

நாள் நேரம் வரை குறித்து, ஒரு நடிகரின் அரசியல் வருகை குறித்து 'தினமலர்' பூணூல் ஏடு குதித்த குதி இருக்கிறதே! அப்பப்பா சொல்லும் தரமன்று.

தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் 'இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை' என்ற 'பஞ்ச்' வசனத்தோடு நடிகர் ரஜினி அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். அடுத்த மாதம் புது கட்சி ஆயத்த பணிகள் மும்முரம் என்று 'டும் டும்' கொட்டி 'தினமலர்' திரிநூல் பரபரபக்க ஆடித் தீர்ந்தது.

அரசியல் அதிசயத்தை நிகழ்த்த முடிவு செய்து விட்டாராம், யார் யாரெல்லாம் 

அவர் பின்னால் அணி வகுக்கிறார்களாம்?

இதோ பட்டியல் போட்டது இனமலரான 'தினமலர்' 

* டில்லியில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஒருவர் கட்சியின் கொள்கைத் திட்டங்களை வகுக்கிறாராம்.

தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய மிக முக்கிய செயலர் ஒருவர் கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினிக்கு வழிகாட்டுகிறாராம்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள், கவர்ச்சி நடிகையர், இளம் நடிகர்கள், வில்லன் நடிகர்கள், குணச் சித்திர நடிகர்கள், இசை அமைப்பாளர் என்று ஏராளமானோர் தயாராகி விட்டனர்.

மற்ற கட்சியில் அறிவிக்காத திட்டங்களாம், இந்து அறநிலையத்துறையை  மாற்றி அமைத்தல் அல்லது முற்றிலும் நீக்குதலாம்! (எதில் குறி பார்த்தீர்களா?)

நட்சத்திரக் கூட்டம், ரசிகர் பட்டாளத்துடன் ரஜினி ரணகள துவக்கத்திற்குத் தயாராகி விட்டாராம். (அது என்ன 'ரணகளம்' எந்த நாட்டின்மீது படை எடுப்பாம்? ரண களம் என்றால் வன்முறை வெறியாட்டமா?)

ரஜினி வியூகம் திமுகவில் கலக்கம் - இப்படியொரு செய்தி ('தினமலர்' - 4.12.2020).

இவ்வளவு ஆட்டம் போட்ட 'தினமலர்' அக்ரகார வகையறாக்களின் ஒவ்வொரு வீடும் இப்பொழுது எழவு விழுந்த வீடாகி விட்டது. ஒரே அடியில் மனுஷன் துவம்சம் செய்து விட்டார்.

ஆத்திரத்தில் அக்னி அலை புரண்ட 'தினமலர்' ரஜினியை வேட்டியை உருவி அண்டர்வேருடன் கார்ட்டூன் போட்டதெல்லாம் அசல் அநாகரிகமே!

Comments