பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்க! வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக!!

தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தலைமையில் தி.மு.. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை,ஜன.22 - சென்னை அறிவா லயத்தில் நேற்று (21.1.2021) நடை பெற்ற திமுக மாவட்டச் செயலா ளர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள  - தீர்மானங்கள் வருமாறு:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக!

உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் - மூன்று வேளாண் சட்டங் களையும் மத்திய பா... அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும்!

 மழையால் பாதிக்கப்பட்டுள்ள

விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கிடுக!

காவிரி டெல்டா உள்பட தமிழகத் தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மார்கழிப் பெரு மழையில் அடியோடு நாசமாகி - பொங்கல் பண்டிகை நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந் துயருக்கும், பேரிழப்பிற்கும் உள் ளாகியிருப்பதை .தி.மு.. அரசு வீணே வேடிக்கை பார்த்துக் கொண் டிருப்பதற்கு மாவட்டச் செயலாளர் களின் இந்தக் கூட்டம் கடும் கண் டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது.

''கணக்கு எடுக்கிறோம்'' என்று வரையறையின்றிக் காலம் கடத் தாமல், உடனடியாக தொடர் மழை யில் மூழ்கிய பயிர்களுக்கும் - அத னால் பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என்றும், நிவர் மற்றும் புரேவி புயல்கள் பாதிப்பிற்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் என்பதை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் களின் இந்தக் கூட்டம் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்க!

30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக் குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண் டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத் தலைவர், தமிழக ஆளுநரைச் சந்தித்து இதுகுறித்து ஏற்கெனவே நேரில் வலியுறுத்தியிருப்பதை இக் கூட்டம் நினைவுகூர்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் - ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத் தினை ஏற்றுக் கொள் ளாமல், தமிழக ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக் கும் மேலாகக் காலம் கடத்தி வருவதற்குக் கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது இதுதொடர்பாக பேரறி வாளன் தொடர்ந்த வழக்கில், “ஆளுநரின் இந்த காலதாமதம் அசா தாரணமானது'' என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதி பதிகளே கருத்து தெரிவித்துள்ள நிலையில், “பேரறி வாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து குடியரசுத் தலை வருக்குப் பதில் ஆளுநரே இன்னும் மூன்று நாட்களில் முடிவெடுப்பார்என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித் திருக்கிறார். ஆகவே, இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், பேரறிவா ளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடன டியாக விடுதலை செய்து  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநர் அவர் களை, மாவட்டச் செய லாளர்களின் இந்தக் கூட்டம் வலியு றுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Comments