தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் ராகுல்

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் ராகுல் காந்திக்கு மாடர்ன் ரேசனலிஸ்ட் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் மலர், இளைஞர்களே உங்களுக்கு தெரியுமா?  தந்தை பெரியார் அம்பேத்கர் நட்பு , உள்பட அய்ந்து ஆங்கில பதிப்பு புத்தகங்களை பேராசிரியர் .காளிமுத்து வழங்கினார்.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டக் கழக தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், பொதுக் குழு உறுப்பினர் இரா.நற்குணன் செ.பிரகாசன் மற்றும் மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments