விவசாயிகளுக்கு போராட்டக்களத்தில் மனத் தளர்வை நீக்கி ஊக்கம் கொடுக்க தனியார் அமைப்புகள் பயிற்சி

புதுடில்லி. ஜன.11 40 நாட்களைக் கடந்து நடந்துகொண்டு இருக்கும் மிகப்பிரமாண்ட போராட்டம், அதனை அலட்சியப் படுத்தும் அரசு என டில்லியில் விவசாயிகள் போராட்டக்களம் திகழ்ந்து வருகிறது.

நீண்ட போராட்டத்தால் விவசாயிகள் மனம் தளர்ந்து சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக சில தனியார் அமைப்புகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றன.

கல்சா என்ற சீக்கிய அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் மற்றும் அவர்களை மனச்சோர்விலிருந்து நீக்கும் வகையில் ஊக்கம் அளித்து வருகிறது,  தற்போது  கால்சா அமைப்பினர் இரண்டு மாதங்களைத் தொடும் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க களமிறங்கி உள்ளனர்

இந்த அமைப்பைச் சேர்ந்த ஜாஸ்மீத் சிங் கூறும் போதுசிங்கு மற்றும் குர்முகி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து துண் டறிக்கைகள் மற்றும் சுவரொட்டிகளை வைத்து வருகிறோம். விவசாயிகளுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந் தால் முன்வருமாறு ஊக்குவித்தோம்.  போராட்டக்களம் என்பது காலநீடிப்பு ஏற்பட்டாலும் நமது கோரிக்கைகளில் இருந்து நாம் பின்வாங்க கூடாது, அது நியாமான கோரிக்கையாக இருப்பின் மக்களின் ஆதரவை தானாகவே பெற்று விடும், அதுவரை நாம் போராட்டக் களத்தில் மனச்சோர்வு அடையாமல் நிலைத்து நிற்கவேண்டும்.  இந்த போராட்டத்தின் காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று நினைப் பவர்கள் அரசை தூண்டிவிட்டு போராட் டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருக்க அழுத்தம் கொடுப்பார்கள்.

அது குறித்து எல்லாம் நாம் கவலைப் படக் கூடாது, மேலும் தோல்வி அடைந்துவிடுவோமா என்று நாம் சோர்ந்துவிடக் கூடாது. அப்படி சோர் வடைந்தவர்களை நங்கள் அழைத்து ஆலோசனை வழங்கி வருகின்றோம்என அவர் தெரிவித்தார்.

சிங்குவில் ஆலோசனை வழங்கு பவர்களில்  சன்யா கட்டாரியாவும்  (26) ஒருவர். இவர் நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். மற்றும் மருத்துவ உளவிய லாளராக பணியாற்றுகிறார். அவரோடு மன்மீத் கவுர் (26) என்பவரும் களத்தில் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இவர்கள் விவசாயி களுக்கான அமர்வுகளை நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Comments